பக்கம்:நெற்றிக்கண்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நெற்றிக் கண்

ஒருத்தி இருப்பாள் போவிருக்கிறது என்றும் ஒரு பிரமை :யான தத்துவம் கூடத் தோன்றியது அவனுக்கு. வெளியே புறப்பட்டுப் போய் விசாரிக்கவும்-தெரிந்து கொள்ளவும் முடியாமல் அதிக நேரம் அருகிலிருந்தே கவனித்தாகவேண் டிய நிர்ப்பந்தம் ஒன்று 'நேஷனல் டைம்ஸில் இருந்தது. செய்திகளோ, தந்திகளோ, கிடைக்கக்கிடைக்க அவற்றைப் பிரித்து வகைப்படுத்தி அச்சுக் கோர்ப்பவர்கள் கையில் கொடுத்து-அவர்கள் ஒவ்வொன்றாக அச்சுக் கோத்துக் கொடுத்த பின் பிழைதிருத்தி மறுபடியும் சரி பார்த்துஅச்சிட வேண்டியிருந்தது. மற்ற தினசரிகளோடு போட்டி விட்டுச் செய்திகளைவிரைவாகவும் முன்பாகவும் தருவதற்கு வேண்டியவசதிகள் இதனால் குறைந்திருந்தன. விரைவாகக் "கம்போஸ் செய்வதற்கு டைம்ஸ் போன்ற நல்ல தினசரிக்கு நவீன 'மானோடைப் இயந்திரம் ஒன்று தேவை யாயிருந்தது. அந்த இயந்திரம் வைத்திருந்த மற்ற தினசரி களோடு போட்டி போடவாவது டைம்ஸ்"க்கும் அது தேவையாயிருந்தது. "மானோ டைப் இயந்திரம் இல்லாத தனால் சுகுணனும் பிழை திருத்துவோரும், இரண்டோர் உதவியாசிரியர்களும் அதிக நேரம் பாடுபட வேண்டியிருந் தது. கம்பாஸிட்டர்கள் மாற்றி மாற்றிக் கம்போஸ் செய்ய அதிக நேரம் ஆயிற்று. நிறையப் புதுப்புதுச் செய்திகளைக் கொடுக்கவும் முடியாமலிருந்தது. 'கம்பாளிட்டர்களின் தொகையைக் கூடுதலாக்கலாம் என்றால் தமிழில் கம்பாவிட்டர்கள் கிடைத்த அளவு ஆங்கிலத்தில் "கம்போஸ் செய்யத் தெரிந்தவர்கள் அதிகமாகக் கிடைக்க வில்லை. வலை போட்டுத் தேடிப்பிடிக்க வேண்டியிருந்தது. .கிடைக்காதபோது இருக்கிறவர்களை வைத்துக்கொண்டே சு குணன் சிரமப்பட வேண்டியிருந்தது. சுகுணன் அந்தக் காரியாலயத்தில் பொறுப்புக்களை கவனிக்கத் தொடங்கிய நாளிலிருந்து இரவு பகல்கள் ஒடுவது தெரியாமல் போயிற்று.

வேளா வேளைக்கு உணவு இல்லாததால் உடல் நலம். கெட்டு விட்டது. சரியான துணையோ ஆதரவோ, அந்த ரங்கம் புரிந்த நட்போ இல்லாமல் அவன் வேதனைப்பட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/244&oldid=590621" இலிருந்து மீள்விக்கப்பட்டது