பக்கம்:நெற்றிக்கண்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நெற்றிக் கண்

நெற்றிக்கண் தன்னைநோக்கி த்திறக்கத்திறக்க அவனுடைய துணிவும் தன்னம்பிக்கையும் வளர்ந்து பெருகின. பழைய நக்கீரன் வெதும்பி விழுந்தது போல அவன் விழுந்துவிட வில்லை, தன் முயற்சிகளிலும், பிடிவாதங்களிலும் வெறி' அதிகமாகவே-அவன் தன் உடல் தாங்க முடிந்த சக்திக்கு. மேல் அதிக சக்தியைச் செலவழித்து உழைக்கலானான். அதன் விளைவையும் அவனால் தவிர்க்க முடியவில்லைமறுநாள் டைம்ஸின் வாரமலர் வரவேண்டிய நாளாக அமைந்துவிட்ட ஒரு முக்கியமான சனிக்கிழமை காலை. அவன் காரியால்யத்திலேயே தன் அறையில் ஒரு மூலையில் சுருண்டு தளர்ந்து படுக்கும்படி ஆகிவிட்டது. ஒரு வேலை யையும் செய்ய முடியாத தளர்ச்சி அவனைப் பற்றியிருந்தது கண்கள் நெருப்பாய் எரிந்தன, தோள்பட்டைகளில் வெட்டி எறிந்தது போல் ஒரு சோர்வு கனத்தது. நடக்கவோ திற்கவோ தள்ளாடும் நிலையில் ஒன்றுமே செய்ய முடியு மென்று தோன்றவில்லை. மூச்சுக் காற்றில் நாசி மயிர் எரிவது போன்ற பயங்கரக் காய்ச்சல். பசுமை செழித்த நல்ல மரத்தை யாரோ வெட்டிச் சாய்த்ததுபோல் தளர்ந்து படுத்துவிட்டான் அவன். வேலைகள் என்னவோ நடை பெற்றுக் கொண்டிருந்தது. உதவியாசிரியர்களும், பிழை. திருத்துவோர்களும், வழக்கமான காரியங்களைக் கவனித்து கொண்டிருந்தார்கள். கமலம் லீவு போட்டுவிட்டு வந்து கடிதங்களைப் பார்த்துப் பதில் அனுப்ப வேண்டியவற்றிற்: குப் பதில்களைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.

முக்கியமான பிரச்னை ஒன்று எதிர் நின்றது. இரண்டு. மணிக்குள் பாங்கில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கட்டி கோடெளனிலிருந்து பத்திரிகைக் காகிதக் கட்டுகளை எடுத்தால்தான் மறுநாள் பத்திரிகை அச்சாகி வெளிவரும். உடல் நலமில்லாத சுகுணனிடம் இதை எப்படித் தெரிவிப் பது என்று "கிளியரிங் கிளார்’க்கும்-அகெளண்டெண்டும். தயங்கிப் பேசாமல் இருந்தார்கள். அப்போது மாத முதல் வாரம் வேறு. முந்திய சில தினங்களில்தான் எல்லாருக்கும். சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் காரியாலயத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/246&oldid=590623" இலிருந்து மீள்விக்கப்பட்டது