பக்கம்:நெற்றிக்கண்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 - நெற்றிக் கண்

ஹி இஸ் நாட் டுயிங் வெல்" என்று கமலம் டக்கென்று ஃபோனை வைத்தபோது சுகுணனுக்கு முள் குத்தினாற் போல மனம் கூசினாலும் அப்போது அதைத் தவிர வேறெது வும் செய்யத் தோன்றவில்லை. துளசி-நேற்று வரை ஏன் ஃபோன் செய்யவில்லை. ஒரு வேளை இன்றுதான் எங்கா வது வெளியூரிலிருந்து திரும்பினாளோ? என்றெல்லாம் சிந்தனை ஆவலோடு ஓடினாலும்-அவன் ஒன்றும் வெளியே காண்பித்துக் கொள்ள முடியவில்லை.

துளசியின் அழைப்பை-அறுத்து முடித்த வேகத்தில் கமலம் அவன் கூறிய மற்ற நம்பர்களுக்கு முயன்றாள். இருவரில் ஒருவர். ஊரில் இல்லை மற்றவருடைய நம்பர் கிடைக்கவே இல்லை. என்ன செய்வது?’ என்ற கேள்வி சுகுணனின் முன் எழுந்தது. உட்கார முடியாமல் மறுபடியும் மூலையில் போய்ச் சாய்ந்தான் அவன். -

"ஹார்லிக்ஸ், போர்ன்விடா, ஏதாவது வாங்கி வருகி றேனே அண்ணா என்றாள் கமலம். வேண்டாம்?' என்பது போல் ஜாடை செய்துவிட்டு,

"இந்த மாதிரி சமயத்திலா நான் இப்படிப் படுத்துக் கிடக்க வேண்டும்?' என்று ஆற்றாமையோடு தனக்குத் தானே பேசுவதுபோல் கூறிக்கொண்டான் அவன். அப்போது பகல் பதினொன்றரை மணிக்குமேல் ஆகியிருந் தது. இரண்டு மணிக்குள் பணம் கட்டி நியூஸ் பிரிண்ட், ரீல்களை எடுத்து வராமற் போனால்? என்ற கேள்வி ஒவ்வொருவர் மனத்திலும் எழுந்து நின்றது. ஏதாவது மாய மாக நடந்து பத்திரிகையைக் காப்பாற்றினாலொழிய வேறு வழி இல்லை என்பதை எல்லாரும் உணர்ந்திருந்தார்கள். கடிகாரமும் தயவு தாட்சண்யமின்றி ஒடிக்கொண்டிருந்தது. 'டைம்ல'க்குப் பல முறை இப்படி எத்தனையோ சோத னைகள் வந்திருக்கின்றன. ஒவ்வொன்றையும் கடந்து அது பிழைத்துத்தான் வாழ்ந்திருக்கிறது. 'ஆனால் இந்த முறையோ?"...நினைப்பதற்கே மரணத்தைவிடக் கொடு. மையானதாக இருந்தது இந்தக் கேள்வி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/248&oldid=590625" இலிருந்து மீள்விக்கப்பட்டது