பக்கம்:நெற்றிக்கண்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது அத்தியாயம் பழக்கப்பட்டு விட்ட மனிதனால் ருசிகளில் எப்போதுமே ஏமாற முடிவதில்லை. இன்னொருவர் மேல் நாம் வைக்கிற கம்பிக்கை அல்லது இன்னொரு வர் நம்மேல் வைக்கிற நம்பிக்கை-பிரியம், அன்பு, அநுதாபம், ஆதரவு-இவையெல்லாம் கூட வாழ்க்கையில் மனிதன் கண்டு விட்ட மனத்தின் உணர்ச்சி பூர்வமான ருசிகள்தான்.

நல்ல வேளையாகத் தென்னிந்திய இரயில் மார்க்கங் களில் சில பகுதி இரயில்களுக்குப் பார்ஸல் பாஸஞ்ஜர்என்று தற்செயலாகவே ஒரு பொருத்தமும் காரணமும் அமையும்படி பெயர் கொடுத்திருக்கிறார்கள். இந்த இரயிலில் வந்தவர்களையோ, வருகிறவர்களையோ, பிரயாணத்தைப் பற்றி விசாரித்தால்கூட பார்ஸலில் வந்தேன்-என்றே மறுமொழி கூறுகிறார்கள். இப்படிச் சொல்வதில் ஒரு குத்தல் அல்லது இரயில்வேக்காரர்களை நிரந்தரமாகச் சபிக்கும் ஒரு சாபம் இருப்பதாகத் தோன்றியது சுகுணனுக்கு. கொண்டதையும் கொள்ளாத தையும் எப்படியோ அள்ளித் திணித்துப் பார்ஸல் செய்து பொட்டணம் கட்டுவது போல்தான் இந்த இரயில்களில் பிரயாணிகள் குழந்தைகளும் குட்டிகளுமாகத் திணியுண்டு -இடியுண்டு வருகிறார்கள். - தான் புறப்பட்ட நிலையத்துக்கு அடுத்த நிலையத் திலேயே குழந்தை குட்டிகளோடு புகுந்த ஒரு பெரிய குடும்பத்துக்குத் தள் இடத்தைத் தியாகம் செய்துவிட்டு நிற்கத் தொடங்கிய சுகுணனுக்குச் சென்னை எழும்பூர் நிலையம் வருகிறவரை மறுபடி உட்கார இடம் கிடைக்கவுே இல்லை. - - .

போன ஆண்டு சென்னையிலிருந்து - ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட பத்திரிகைப் பிரதிநிதிகளின் தூதுகோஷ்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/25&oldid=590391" இலிருந்து மீள்விக்கப்பட்டது