பக்கம்:நெற்றிக்கண்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 249

-அவள் குரலில் தயங்கியபின் நிதானமாகவும் நிர்த் தாட்சண்யமாகவும் அவன் அவளுக்குப் பதில் கூறினான்:

"இவை என்னுடைய சொந்த சிரமங்கள். நான் பெருமைப்படவோ, சிறுமைப்படவோ இன்று காரணமா வயிருப்பவை இவைதான். இவற்றைப் பங்கிட்டுக் கொள்ள நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை.என்னுடைய வறுமை கயின் துன்பங்களில் அவற்றைக் காண்பதற்காக என்னைவிட வசதியுள்ளவர்கள் எதிரே வந்து நிற்பதை நான் விரும்பவும் முடியாது-இரசிக்கவும் வழியில்லை.

-அவனுடைய வாய் சொந்தத் தளர்ச்சியினாலும். ஆற்றாமையினாலும், எழுந்த கோபத்தில் இப்படிப்பட்ட சொற்களை உதிர்த்தாலும், மனம்-தான் அவளை நோக்கி நியமித்து அனுப்பும் இந்தச் சொற்கள் மிகக்கடுமை யானவை என்பதை உணர்ந்தே, இருந்தன. . . . .

அவளோ இந்த வார்த்தைகளில் சீற்றமடையாமல் கண்களில் நீர் நெகிழ அவனையே பார்த்துக்கொண்டிருந் தாள். பின்பு ஒவ்வொரு வார்த்தையாக எண்ணித் தேர்ந் தெடுத்துத் தொடுத்து வாக்கியம் அமைத்துப் பேசுபவள் போல் அவள் அவனை நோக்கிப் பேசினாள்:

'எனக்குத் தனியே என்னுடைய சொந்த சிரமங்கள் என்று பிரிக்கும் படியாக ஒன்றுமில்லை. ஏனென்றால் உங்களுடைய சிரமங்களையே என் சிரமங்களாக உணரப் பழகிவிட்டவள் நான். இந்த வரவு செலவுக்கணக்கிலும், உப்புப் புளிச் செலவிலும் தேய்ந்துவிடாமல்-உல்லாச மாக-சுதந்திரமாக நீங்கள் எழுதிக் கொண்டிருக்க வேண்டு மென்று எனக்குள் இரவு பகல் உறங்காமல் இன்னும் நோன்பியற்றுகிறேன் நான்...! கோபத்தில் ஏதேதோ பேசுகிறீர்கள். பரவாயில்லை. ஆனால் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களுடைய முதல் சிறுகதை 'யைப் பாராட்டி உருகத் தொடங்கின் நாளிலிருந்து உங்கள் விமனக்கோவிலில் இலட்சுமீகரமாக நின்று-கற்பனையாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/251&oldid=590628" இலிருந்து மீள்விக்கப்பட்டது