பக்கம்:நெற்றிக்கண்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 253

-ஒரு கொத்து விமான டிக்கெட்டுகளையும். மணி யார்டர் அனுப்பிய இரசீதுகளையும், பாங்க் டிராஃப்ட்கள் அனுப்பிய இரசீதுகளையும், இன்ஷாசர் பவர் அனுப்பிய பதிவு சீட்டுக்களையும் ஆவேசத்தோடு தன் கைப்பையி லிருந்து அவன் மேஜை மேல் அள்ளிக் குவித்தாள் துளசி. அவள் அப்படிச் செய்திருப்பது சாத்தியமென்பதை உறுதி யாக நம்பிய சுகுணன் அப்படியே மலைத்துப்போய் அவளை இமையாமல் நோக்கினான். தாங்கிக்கொள்ள முடியாத 'பெரு வியப்பாயிருந்தது அது. அவளோ ஒரு பாவமும் அறியாத பேதை போல், ! உங்கள் இதயத்தில் நிரம்பிக் கிடக்கும் இலட்சுமீகரம் நான்தான். என்னை அங்கிருந்து தயவுசெய்து வெளியேற்ற முயலாதீர்கள்'- என்று இறைஞ்சுவதுபோல் கண்ணிர் மல்க அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கூறிய உண்மையை நிரூபிப்பது போல் அவள் கைகளில் நிறைந்திருந்த பொன் வளைகள், காதிலிருந்த வைர அணிகள், மூக்குத்தி, மோதிரம், கழுத்தி லிருந்த வைர நெக்லஸ் எல்லாம் அந்த அந்த இடங்களில் இப்போது இல்லாது சாதாரணமான சில அணிகளோடு பொலிவற்று வெறுமையாயிருப்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. அவள்மேல் எல்லையற்ற கருணையும். பச்சாத்தாபமும் பெருகிட அவன் இப்போது அவளை நோக்கினான். அவனுக்குத் தொண்டை கம்மி அடைத்தது. குரல் கரகரத்தது. -

"நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது துளசீ: இன்னொருவருடைய உடைமையாகிவிட்டவள் நீ என்பதை மறந்துவிட்டாயா?" - -

'மறக்கவில்லை! ஆனால் இது மனிதர்களின் உலகம். வெறும் அன்பினால் மட்டும் நமக்கு வேண்டியவர்களைக் காக்கவோ, வளர்க்கவோ இங்கு முடிவதில்லை. நமக்கு வேண்டியவர்களை அவர்களுடைய தேவைகளுக்குத் திண்டாட விட்டுவிட்டுப் பிரியங்களுக்காக மட்டும் எதிர் 4ார்ப்பது நியாயமாகாது. இன்று இந்தத் துளசி எங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/255&oldid=590632" இலிருந்து மீள்விக்கப்பட்டது