பக்கம்:நெற்றிக்கண்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 25த்

என்னை உங்கள் முன் சௌபாக்கியவதியாக்குகின்றன. தயவு செய்து இந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்து நியூஸ் பிரிண்ட் கிளியர் செய்து வாங்க வழி செய்யுங்கள், பத்திரிகையின் வெளிவரவேண்டிய பதிப்புக் கால தாமத் மில்லாமல் வெளிவரட்டும். என் உதவியைப் புறக்கணிக்கா தீர்கள். நான் வாடாமலிருப்பதற்காக நானே செய்து கொள்ளும் உதவி இது..." -

"என்னைப் பெரிய கடனாளியாக்குகிறாய் துளசி!' 'நானே உங்களுக்குக் கடன்பட்டிருக்கும்போது அது எப்படி சாத்தியம்?...' - -

-சுகுணன் அவளை நோக்கி முழுமையாக முகமலர்ந்து புன்முறுவல் பூத்தான். அவள் தன். கண்களைத் துடைத்துக் கொண்டாள். சுகுணன் கமலத்தை அழைத்துப் பணத்தை. அவள் கையில் ஒப்படைத்தான். அக்கெளண்டண்டிடம் கொடுத்து கிளியரிங் கிளார்க் மூலம் பேப்பருக்கு ஏற்பாடு செய்யும்படி வேண்டியதோடு துளசியையும் சுருக்கமாக் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். பத்திரிகை. நிற்காமல் காப்பாற்ற வந்த ஒர் அபூர்வ வனதேவதையைத் தொழுவதுபோல பாவனையில் துளசியை நோக்கிக் கைகூப்பினாள் கமலம்.' . . . . . - -

"சாசுவதத்திற்கு எல்லை காலத்தின் நெடுமை. யில்லை. ஒரு விநாடி சத்தியமாக நின்றாலும் அது ஒரு விநாடிகூட சாசுவதம்தான். புகழையும் பொறுப்பையும் தாங்குகிற ஆயுதமாய்ப் பழியையும் பாராட்டுதலையும். நிர்ணயிக்கிற சக்தியாய்த் தன் கையிலிருக்கிற எழுது கோலைப் போல் அவள் நினைவும் தன்னுள் சாசுவதமே என்று முன்பு ஒருநாள் துளசியைப்பற்றி நினைத்த நினைப்பே இப்போது அவனுள் மிகுந்தது.

"நான் புறப்படுகிறேன், நாளைக்கு மறுபடி டில்லி போக வேண்டுமாம். அப்பா நாளைக் காலை விமானத்தில் டிக்கட் வாங்கிவிட்டார். மறுபடி எப்போது சென்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/257&oldid=590634" இலிருந்து மீள்விக்கப்பட்டது