பக்கம்:நெற்றிக்கண்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நெற்றிக் கண்

யில் தானும் ஒருவனாகப் போயிருந்தபோது டோக்கியோ வுக்கும் ஒஸாகாவுக்குமிடையே பிரயாணம் செய்த இரயில் சுத்தமும் அழகும், நேரம் தவறாத வேகமும், பிரயாணிகள்

உட்காருவதற்குத் தாராளமான இடவசதியும், இருந்ததை இப்போது நின்ைவு கூர்ந்தான் சுகுணன். அப்படி நினைவு

கூர்ந்தபோதுதான் பிரயாணம் செய்து கொண்டிருந்த, இரயிலையும் வளர்ச்சியடைவதில் மந்தகதியோடும் தன்

தேசத்தையும் சிந்திக்கவே கொஞ்சம் வெட்கமாயிருந்தது. அவனுக்கு.

இந்திய இரயில்வேயில் பிரயாணிகளுக்கும், சாமான் களுக்கும், தனித்தனி புக்கிங் ஆபீசுகள் இருப்பது ஒன்று. மட்டும்தான் பெரிய வித்தியாசமாகத் தோன்றியதே தவிர, வேறு வித்தியாசங்கள் எதுவும் இருப்பதாகத் தோன்ற வில்லை. தீவிரமாகச் சிந்திக்கப் பழகிவிட்ட ஒரு பத்திரிகை யாளன் என்ற முறையில் இவற்றை நினைப்பதிலிருந்து, அவனால் தன்னைத் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. பார்க்கப் போனால் அவன் கண்விழித்துப் பிரயாணம். செய்த நேரத்தில் இந்திய இரயில்வேயைப் பற்றியும், எப்போதோ ஜப்பானுக்குப் போய்விட்டு வந்ததைப் பற்றி யும், டோக்கியோ இரயில் நிலையத்தில், இந்த நிலையத் துக்குள் வரும் இரயில்களையும் இங்கிருந்து புறப்படும் இரயில்களையும்கொண்டு உங்கள் கடிகாரத்தில் நேரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்’-என்று ஜப்பானியர்கள் பெருமை. யாகச் சொல்லிக் கொள்வதைப் பற்றியும் நினைத்த நேரம் மிகவும் குறைவுதான். அவன் அதிகநேரம் மாற்றி மாற்றி நினைத்த நினைவோ வேறொன்றாயிருந்தது.

நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் பிரயா ணம் செய்த நேரத்தில் துளசியைப் பற்றித்தான் அதிக. நேரம் நினைத்திருந்தான் அவன். தான் ஏன் இனிமேலும் அவளைப்பற்றி இப்படி நினைக்க வேண்டுமென்று-அவளை நினைப்பதை உடனடியாகத் தவிர்க்கத் துணியாத தன் மனத்தின் மேலேயே ஆத்திரம் வந்தது அவனுக்கு. இனிப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/26&oldid=590392" இலிருந்து மீள்விக்கப்பட்டது