பக்கம்:நெற்றிக்கண்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 259

'தயவு செய்து இந்த ஆட்டோ-கிராப்பில் இரண்டு வரி எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பீர்கள் அல்லவா. எனக்கு உங்கள் கையெழுத்துக்களைத் தினம் ஒரு முறையாவது கண் குளிரப் பார்க்க வேண்டும் போல

ஆசையாயிருக்கும்-?"

"'என் எழுத்தில் என்னைப் பார்ப்பதைவிட உன் இதயத்தினுள்ளேயே என்னை நீ சுலபமாகப் பார்த்துக் கொள்ள முடியுமே துளசீ...!"

"இதுவரை நான் உங்களிடம் ஆட்டோ-கிராப் வாங்க வேண்டிய அவசியமில்லாது அருகிலேயே இருந்து விட்டேன். இப்போது தொலைதுாரத்துக்குப் பிரிந்து போவதால் ஏதோ அல்ப ஆசை. உங்கள் கையெழுத் தையோ போட்டோவையோ நான் வேறுவிதமாகப் பார்க்க உலகம் ஒப்பாது. தயவு செய்து மறுக்காதீர்கள்-என்று கூறியவாறே ஆட்டோ கிராப்பை நீட்டினாள் அவள். அதில் தான் எழுத வேண்டிய பக்கத்துக்கு எதிர்ப்புறம் தனது சிறிய புகைப்படம் ஒன்று அளவாகக் கத்தரித்து ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டான் சுகுணன்.

'மனிதர்கள் நாடும் ஆசைகள் இப்படி அல்பமானவை தான். ஆனால் இந்த அல்பமான சுகங்களைத்தானே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மகாகவிகள் பெரிதாகக் கொண்டாடி எழுதியிருக்கிறார்கள்'- என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான் சுகுணன். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு கைப்பையின் உள்ளே வைத்தாள். மறுபடியும் அவள் கண்களில் நீர் திரண்டது. "அப்பாடில்லியில் என் சொந்த ஆடம்பர்ச் செலவுகள் அதிகமாயிருக்குமென்று மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்பு. கிறார். இவருடைய சம்பளம் வேறு நிறைய வருகிறது. உங்களுடைய் பத்திரிகையைக் காப்பாற்றுவதற்காக நான் பவுடர் ஸ்நோவைக்கூட விட்டாயிற்று, வீட்டுச் செலவிை யும் சொந்த ஆடம்பரச் செலவுகளையும் மீதம் பிடித்தாவது டைம்ஸுக்கு என் உதவிகளைத் தொடர்ந்து செய்வேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/261&oldid=590639" இலிருந்து மீள்விக்கப்பட்டது