பக்கம்:நெற்றிக்கண்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 26直

யாது’’-என்று அருகே வந்தவளிடம் நாத் தழுதழுக்கக் கூறினான் அவன். சில விநாடிகள் குனிந்து பூமியையே பார்த்துக்கொண்டு தயங்கி நின்ற துளசி-தொண்டையை அடைக்கும் குரலில் 'வருகிறேன்...' என்று கூறிவிட்டு மீண்டும் காரை நோக்கி நடைப்பிணமாகச் சென்றாள். அந்தப் பிரியும் நேர மன நிலைக்குப் பொருத்தமாக அமைந் தாற்போல, * - - -

'மனிதர்களின் ஆசைகளே இப்படி அல்பமானவை தான்-என்று அவளுடைய கையெழுத்து நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதியதை மீண்டும் நினைத்துக் கொண் டான் அவன்.

அவள் கார் புறப்பட்டது, நகரும் காரிலிருந்தே ஒரு கையை ஸ்டியரிங்கில் வைத்தபடி இன்னொரு கையை உயர்த்தி ஆட்டி விடைபெற்றாள் அவள். அவனும் வலது கையை உயர்த்தி ஆட்டினான். கார் தெருத்திரும்புகிற வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தான் சுகுணன். மனத் தில் ஏதோ ஊமையாக அழுதது. அடுத்த கணமே அங்கு ஒரு திடமான சமாதானமும் பிறந்தது.

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒருவருக்கு மற். றொருவர் அர்ப்பணமாகிவிடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தை யோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப்போல் உள்ளேயே கணிகிறது. வாழ்வின் சோர்வுகளில் அது அணை வதில்லை. நீறு மட்டுமே பூக்கிறது -என்று எண்ணிய படியே மேலே படி ஏறி அலுவலகத்துக்குள்ளே திரும்பி னான் அவன் இனி அடுத்தவினாடியிலிருந்து ஓர் இலட்சியப் பத்திரிகாசிரியனை நோக்கிச் சமூகத்திலிருந்து திறக்கும் எத்தனையோ நெற்றிக்கண்களைப் பொறுத்துக்கொண்டு அவன் வெதும்பி விழுந்து விடாமல் நிற்க வேண்டியிருக்கும். அந்த நெற்றிக்கண் சூடுகளை அவன் இனிமேல் தளராது தாங்கமுடியும். அவனுக்குள் இருக்கும் மற்றொரு இதயத் தின் அன்பு அதற்குத் துணைசெய்யும். அந்த அன்பில் அவன்

நெ-17 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/263&oldid=590641" இலிருந்து மீள்விக்கப்பட்டது