பக்கம்:நெற்றிக்கண்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 நெற்றிக் கண்

வேதனை இருக்கிறது. அந்த வேதனையில் தான் அவன் அன்பும் இருக்கிறது சாதாரண மனிதர்களின் வேதனைதான் அவர்களுக்குப் பெரிய தவம். ஏனென்றால் வாழ்க்கையை விட் விட்டுக் காட்டுக்குப் போய் வேறு தனித் தவம் செய்ய அவர்களால் முடியாது.

உள்ளே போய் அமர்ந்த சுகுணன் அன்றைய டைம்ஸ்’ பதிப்புக்குத் தலையங்கம் எழுதப் பேனாவை எடுத்தான். வெளியே மாலை இருள் மயங்கத் தொடங்கியிருந்தது. கார் ஹார்ன் ஒசைகளும், மனிதர்களின் குரல் விகாரங்களும் நெருக்கியடித்துக் கொண்டு கேட்கத் தொடங்கின. இருந் தாற் போலிருந்து மகாதேவனோடு தாமஸ் மன்றோவின் குதிரைச் சிலை கண்முன் மானசீகமாக ஓடுவதுபோல் ஒரு பிரமை நிழலாடியது. அவன் எழுதத் தொடங்கினான். சக்தி வாய்ந்த சொற்கள் அவன் நியமித்த வேகத்தோடுவிதியோடு காகிதத்தில் போய் இறங்கி, உருவாகி நின்றன.

ஒரு நல்ல பத்திரிகையாளனுக்கு இரண்டு கவலைகள் உண்டு. சமூக நியாயத்தைப் பற்றிய கவலைகள். சொந்த தியாயங்களைப் பற்றிய கவலைகள். அவனுக்குச் சொந்த மென்று எதுவுமில்லை. ஆனால் அவனுள்ளும் ஒரு கவலை இருந்தது. மறுபடியும் கூறினால் அந்தக் கவலைதான் அவன் வேதனை. அந்தக் கவலைதான் இன்று அவன் மகிழ்ச்சி. இரண்டும் வேறு வேறு இல்லை. தன்னுடைய வறுமைக் காகவும் பிறருட்ைய அறியாமைகளுக்காகவும் சேர்த்துப் போராடவேண்டிய ஒரு தேசத்தில் தான் வாழ்கிறோம் என்பதை இனி ஒவ்வொரு கணமும் அவன் நினைவு கூர்ந்தாக வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கும். வறுமை உள்ளவர்களிடம் நல்லெண்ணமும் வசதி உள்ள வர்களிடம் அலட்சியமும் மிகுந்த ஓர் இரண்டுங்கெட்டான் தேசத்தில் நியாயங்களைச் சாதிக்க முயலுகிற ஒர் இலட் சியப் பத்திரிகையாளனின் சிரமங்கள் எல்லாம் இனி அவன் அடைய வேண்டியிருக்கும். புதுமைக்கும், வளர்ச் சிக்கும்.செவிசாய்த்து வரவேற்கும் மனப்பான்மையில்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/264&oldid=590642" இலிருந்து மீள்விக்கப்பட்டது