பக்கம்:நெற்றிக்கண்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 26.3

ஒர் ஆட்டுமந்தைக் கூட்டத்தைத் திருத்துவதற்குப் பிடிவாதமும், இலட்சியமும் மட்டும் போதாதென்பதை ஒவ்வொரு கணமும் அவன் உணரவேண்டியிருக்கும். பிடிவாமும், இலட்சியமும் சாதிக்க முடிந்ததைவிடச் சாதுரி யமும் சயோசித புத்தியுமே அதிகமாகச் சாதிக்கமுடியும் என்ற சாதாரண நடைமுறை உண்மையையும் எதிர் கொண்டாக வேண்டியிருக்கும். அறியாமைக்கு எதிராக அறிவைக் கொண்டு போராட வேண்டியது தவிர வெறும் மனிதர்களின் சூழ்ச்சிக்கு எதிராக அறிவைக் கொண்டு போராட வேண்டியிருக்கும் என்று இனி அவன், உணரவும் நேரிடலாம். யாருடைய அநியாயங்களை எதிர்த்து அவன் குரல் கொடுக்கிறானோ அந்த அநியாயங்களைப் பயிர் செய்து பிழைப்பவர்கள் அவனை நோக்கிக் கோரமான நெற்றிக் கண்களைத் திறந்து வெதுப்பவும் முயலலாம். ஆனால் அதற்காக அவன் தயங்கவோ, தளரவோ முடி யாது. அவன் தனக்குள் அணையாமல் காக்கும் அன்பு என்கிற வேள்வி நெருப்புத்தான் சமூகத்தின் மூலைமுடுக்கு களிலிருந்து அவனை நோக்கித் திறக்கும் இந்தக் கோரமான அனல் விழிகளிலிருந்து மீளும் சத்தியத்தை இனி அவனுக்குத்

தரவேண்டும் போலும்! - -

(முற்றும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/265&oldid=590643" இலிருந்து மீள்விக்கப்பட்டது