பக்கம்:நெற்றிக்கண்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 27

சப்பையான ஒக்ஸ்வாகன்-காரும் இப்போது சுகுணனின் பார்வையில் தெரிந்தது.

என்னா சார்? வர் ரீங்களா? கலியாணத் தன்னிக்குக் காணவேயில்லியே...எங்கனாச்சும் வெளியூர்லே ஜோலியா பூட்டிங்களா?-என்று விசாரித்தான் அந்த டிரைவர்.

அவனுடைய கேள்வியில் எழுப்பப்பட்ட சந்தேகத்துக்கு மறந்தாற்போலப் பாவித்துக் கொண்டவனாக ஒரு பதிலும் சொல்லாமலே-தெரிந்தே வேண்டுமென்றே கை நழுவ விடு கிற ஒரு பொருளைப்போல அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு 'இந்த அதிகாலை நேரத்திலே எழும்பூருக்கு எங்கே வந்தாய் அப்பா? யாராவது ரயில்லே வாராங்களா? அழச்சுக்கிட்டுப் போக வந்திருக்கியா?”...என்று அவனிடம் வேறு கேள்வியைக் கேட்டான் சுகுணன்.

இல்லீங்க. புதுசாக் கலியாணமான மாப்பிள்ளை ஐயா வும், துளசி அம்மாவும் கோடைக்கானலுக்கு ஹனிமூன் போறாங்களாம். ஐயா டிக்கட் ரிசர்வ் பண்ணிட்டுவரச் சொன்னாரு. அதுக்காவத்தான் வந்தேன்'-என்றான் டிரைவர்.

அவனுடைய இந்தப் பதில் மனத்தில் இன்னொரு முள்ளைக் குத்தினாற் போலிருந்தது சுகுணனுக்கு. இரண்டு மூன்று விநாடிகள் தயங்கிவிட்டு வர்ரீங்களா சார்? அறை யிலே கொண்டு விட்டுப்பிட்டுப் போறேன்'-என்று கேட்ட டிரைவருக்கு. 'இல்லே! நான் போய்க்கொள்கிறேன். مذيع காரியத்தைப் பார்-என்று கச்சிதமாகப் பதில் வந்தது. சுகுணனிடமிருந்து. - - -

பதினைந்து நிமிடங்கள் சடுகுடு விளையாடுவதுபோல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக அலைந்து ஒட்டம் பிடித்து மீண்டபின் டாக்சி கிடைத்தது. டாக்சியில் போகும் போதும் ஏதேதோ நினைவுகள். அதாவது போக வேண்டிய இடத்தை டாக்ளிக்காரனுக்குச் சொல்லவும் மறந்துவிட்ட அளவிற்கு நினைவுகள். டாக்சி எழும்பூரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/29&oldid=590395" இலிருந்து மீள்விக்கப்பட்டது