பக்கம்:நெற்றிக்கண்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29

யிருந்தது. முன்புறமோ பின்புறமோ அதில் எங்கும் அனுப்பியவர் முகவரியோ வேறு குறிப்போ எதுவுமே இல்லை. இந்த மாதிரி வேளைகளில் மனத்தில் தோன்றும் ஒரு தற்செயலான ஆனால் அதே சமயத்தில் பின்னால் சரியாயிருக்கப் போகிற ஒர் அதுமானத்தோடு தான் அறையைப் பூட்டிக்கொண்டு அவசரமாக இரயிலேறி வெளியூர் போனபின் துளசி யாரிடமாவது இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கக்கூடும் என்று எண்ணிப் பிரித்துப் பார்த்தால் அநுமானம் தவறாதபடி அது துளசி :யின் கடிதமாகவே இருந்தது.

தன் கையெழுத்தினால் எழுதக் கூசியோ, பயந்தோ - அவளே ஜாக்கிரதையோடும், பயத்தோடும், எச்சரிக்கை யோடும் அந்தக் கடிதத்தைத் தமிழில் டைப் செய்திருந்தது அவனுள் இன்னும் அதிகமாக ஆத்திரமூட்டியது. ஒரு மனிதனுடைய உறவை அடைவதிலும் விலக்குவதிலும் பெண்ணுக்குத்தான் எத்தனை ஜாக்கிரதை எத்தனை முன்னெச்சரிக்கை? எத்தனை சம்பிரதாயமான பயங்கள்? அவசர அவசரமாகக் கடைசித் தாளை விரித்துக் கையெழுத்தைப் பார்த்தான். அதுவும் அவளுடைய சொத்த எழுத்தினால் இல்லை. உங்களுடையவள்-அபலை" என்ற வார்த்தைகளும்கூட டைப் செய்யப்பட்டே இருந்தன. அதன் மேலிருந்த ஆத்திரம் காரணமாகக் கடிதம் எழுது வதற்கென்றே தயாரிக்கப்பட்ட பஞ்சு போன்ற மெல்விய தாளில் எழுதப்பட்டிருந்தும் அந்த இலேசுக் காகிதங்கள் கூடத் தன் கைகளில் கல்லாய்க் கனப்பதுபோல அப்போது உணர்ந்தான் சுகுணன். இதற்குள் எதிர்த்த் அறைக்காரரும் :பக்கத்து அறைக்காரரும் குசலம் விசாரிக்க வரவே - அவர் களிடம் ஒப்புக்கு ஏதோ பேசி அனுப்ப வேண்டியிருந்தது. அவளுடைய அந்தக் கடிதத்தைப் படிக்காமல் அசிரத்தை செய்ய வேண்டும் போல் வெறுப்பாகவும் இருந்தது. உடனே அவசர அவசரமாக அதைப் படித்து விட்டு ஆத்திரப்படவேண்டும் போலவும் இருந்தது. இந்த உணர்ச்சிக் குழப்பத்தில் என்ன செய்வதென்று தயங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/31&oldid=590397" இலிருந்து மீள்விக்கப்பட்டது