பக்கம்:நெற்றிக்கண்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - $ 1

அவ்வளவு நேரம் அணைக்கட்டி நிறுத்தியிருந்த ஆர்வம் மீறிப் பெருக, அந்தக் கடிதக் கத்தையைக் கையிலெடுத். தான் சுகுணன். கடிதத்தின் மேற்புறம் தேதி - நேரம்: மணி நிமிடம் கூட டைப் செய்யப்பட்டிருந்தது. இரவு பதினோரு மணிக்கு மேல் தன் அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு இந்தக் கடிதத்தை இரகசியமாக "டைப்' செய்திருந்தாள் அவள். .

என்றும் என் வழிபாட்டுக்குரிய தெய்வத்திற்கு" என்று புது, மிஷினில் புதுப் பச்சை ரிப்பன் மாட்டி அடித்தாற்போல் பச்சைநிற எழுத்துக்கள் முதல் வரியாகத் தனியே எடுக்கப்பட்டுக் காவியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் போலவோ, காப்புப் போலவோ அணிவகுத்து முன் நின்றன. அந்த ஒரு வரியைம் படித்த விநாடியில் மேகம் மழையாகக் கொட்டி மறைந்தாற்போல் அவள் மேலிருந்த ஆத்திரம் கருணையாகப் பெருகி மறைந்தது, பார்க்கப் போனால் நீண்ட வாழ்க்கையின் எந்த நிலையிலும் எந்த இடத்திலும் பெண் என்பவள் ஒர் அபலைதான். இந்த நிலையில் ஒருத்தி சந்தர்ப்பவசத்தினால் தன்னுடையவளாக முடியவில்லை என்பதற்காக அவளை வெறுப்பது எவ்வளவு: சுயநலமானது? அல்லது சிறுபிள்ளைத்தனமானது?-என்று. இப்படி எண்ணியபோது - தன்ன்ை மணந்துகொள்ள் முடியாமல் போய்விட்டது என்ற ஒரே காரணத்துக்காகத் துளசியை உதாசீனம் செய்வது பக்குவமான செயலாக அவனுக்கே படவில்லை. திடீரென்று எதற்காகவோ அவள் மேலே தான் பெரிதாகப் பரிதாபப்படவேண்டும் போலவும் அனுதாபப்படவேண்டும் போலவும் மிக விரைவாக அவன் உணர்ச்சி மாறியது. அந்தக் கடிதத்தை அவள் தொடங்கி யிருந்த ஒழுங்கு, மரியாதை, சிரத்தை, பயம், அவளுடைய, புன்னகையைப்போல் சுத்தமான அந்தப் புதிய பச்சை நிற . டைப் எழுத்துக்கள்-எல்லாம் சேர்ந்து அவன் மனத்தை இளகச் செய்துவிட்டன. இந்த விநாடி அவன் மனம் ஒரு கவிஞனின் மிக மென்மையான சத்துவ குணத்தோடி ருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/33&oldid=590399" இலிருந்து மீள்விக்கப்பட்டது