பக்கம்:நெற்றிக்கண்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. நெற்றிக் கண்

' என்னைத் தயை செய்து - பெருந்தன்மையோடு :மன்னித்து விடுங்கள். சொல்லாமல் கொள்ளாமல் எல்லா

ஏற்பாடும் செய்து முடித்துவிட்டு அப்பா இப்படி என் அபிப்பிராயத்தையோ ஆசையையோ நான் வெளியிட ஒரு மணிநேர அவகாசம் கூடத் தராமல் திருமணம் என்ற பிரமிப்பான காரியத்தைத் திடுமென்று எனக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துவாரென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

வாழ்க்கை நாம் திட்டமிட்டபடி எதிர்வருவதில்லை. அது தான் திட்டமிட்டபடி நம் முன் நேர்கிறது'-என்று உங்களுடைய பாலைவனத்துப் பூக்கள்' என்ற நாவலில் நீங்கள் எழுதியிருக்கிற கடைசி வாக்கியங்களைத் தான். நினைக்கிறேன் இப்போது. எங்கள் வீட்டில் எனக்கு எவ்வளவோ, உரிமையும், செல்லமும் உண்டு என்று பேர். ஆனால் இந்தத் திருமண சம்பந்தமாக மட்டும் ஏனோ என்னை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் இப்படி நிர்க் கதியாய் விட்டு விட்டார்கள். X

ஒவியாக வெளிப்பட்டு அபிப்பிராயங்களையும் அங்கீ காரங்களையும் தேடாமல் மனத்தினுள்ளேயே அடங்கி விடும் கற்பனையான சங்கீதத்தைப் போல இனிநினைப்பின் எல்லையிலேயே தங்கி மரியாதை பெற வேண்டிய பொருளாகி விட்டது நம் காதல். . .

என்னுடைய இந்தக் கையாலாகாத வாக்கியத்தைப் படித்ததும் என்னைக் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போலக் கோபமும் ஆத்திரமும் வரும். உங்களுக்கு. அப்படி உங்கள் கோபத்திற்கும், ஆத்திரத்திற்கும் பொருளானால் கூட மகிழ்ச்சியாயிருக்கும் எனக்கு. ஏனென்றால் நான் எந்தக் கோபத்துக்குப் பாத்திரமாகிறேனோ அந்தக் கோபம் உங்களுடையது. நிதானமாக என் நிலையைச் இந்தித்தீர்களானால் என் மேல் கோபம் வருவதற்குப் பதில் அநுதாபம் தான் வரும் உங்களுக்கு. நான் உங்களோடு நெருங்கிப் பழகியதையும், உங்கள் எழுத்துக்களின் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/34&oldid=590400" இலிருந்து மீள்விக்கப்பட்டது