பக்கம்:நெற்றிக்கண்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 33

மோகம் கொண்டதையும், பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் அப்பாவைக் காண்பதற்காக எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்த போதெல்லாம் தேவைக்கதிகமான உரிமையும், உறவும். பாராட்டி உங்களை ஒடியாடி உற். சாகமாக உபசரித்ததையும் வெறும் இரசிகத் தன்மை என்று மட்டுமே அப்பாவால் எப்படிச் சாதாரணமாக நினைத்து ஒதுக்கிவிட முடிந்த தென்பது தான் எனக்கே ஒரேடியாக விளங்கவில்லை. இந்த விஷயத்தில் அப்பாஇப்படி என்னைக் கைவிட்டு விடுவாரென்று நான் நினைக்கவில்லை. இதில் உங்களை விட எனக்குத் தான் பேரிடி. -

நான் பெண், பெண்கள் பிறக்கும் போதே முன்னெச்ச ரிக்கையோடு கூடப் பிறந்திருக்கிறார்கள்-என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே; அந்த முன்னெச்சரிக்கை கூடச் சரியான சமயத்தில் எனக்கு இல்லாமல் போய் விட்டது. தான் தான் நன்றாக ஏமாந்து போனேன். எதையும் வெளியில் சொல்லவும் முடியாது உள்ளேயே அழுது புழுங்க வேண்டும். உள்ளேயே நொந்து வேகவேண்டும். இந்த ஏமாற்றத் தோடு வாழவும் வேண்டும். அல்லது வாழ்ந்து கொண்டே ஏமாற வேண்டும். நீங்கள் ஆண் பிள்ளை ஏமாற்றத்தைக்கூட விரக்தியாகவோ, தைரிய' மாகவோ மாற்றிக் கொண்டுவிட முடியும். நான் தான் இதில் பெரிய பாவி. நாளைக்கும் அதற்குப் பின்பும் விடியப் போகிற ஒவ்வொரு தினமும் இனி எனக்குப் பெரிய சுமைதான். இந்த விநாடியிலும் கூட வெகுண்டெழுந்து அப்பாவிடம் போய் 'எனக்கு இந்தக் கலியானத்தில் சம்மதமில்லை. நான் சுகுணன் அவர்களை என் நாயகராக வரித்து விட்டேன். தயைசெய்து இப்போதே இந்தக் கலியாணத்தையும் இதன் ஆரவார ஆடம்பரத் தடபுடல் களையும் உடனே நிறுத்தி விட்டுத் திருப்பதிக்கோ திருநீர் மலைக்கோ அழைத்துப் போய் என்னையும் என் சுகுணனை' யும் இணைத்து வையுங்கள். எங்கள் அன்பைக் கெளர' விப்பது போல் எங்கள் திருமணம் எளிமையாக நடந்தால்: போதும்’-என்று கண்ணைக் கசக்கிக் கலகம் செய்யலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/35&oldid=590401" இலிருந்து மீள்விக்கப்பட்டது