பக்கம்:நெற்றிக்கண்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.6 . - நெற்றிக் கண்

குலத்துக்கே கல் மனம். நாங்களோ காரணத்தை மறைக்க முடிந்தாலும் கண்ணிரை மறைக்க முடியாது. எதிர் வரும் இன்னொரு பிறவி எதிலாவது- இந்த ஞாபகமும் சுவடும். தமக்கு நினைவில்லா விடிலும் கடவுள் நம்மைக் கணவன் மனைவியாக இணைக்கட்டும். இந்தப் பிறவியை-எனக்குப் பிடிக்காமல் நான் தாலிக்கயிற்றால் சிறையிடப்படும் இந்த வாழ்வை ஒரு கெட்ட சொப்பனம் போல அவசரமாக, ஒட்டிவிட வேண்டும் போல இப்போது நான் பறக்கிறேன். நினைப்பினாலும் பாவனையினாலும் நான் உங்கள் அடிமை. நீங்கள் தான் என் இதயத்தை ஆளுகிறீர்கள். அடிமைகள் ஆளுகிறவர்களுக்குச் சமாதானம் கூறுவது அதிகப் பிரசங்கித் தனமாயிருக்கும். எனவே திடுமென வந்த இந்தப் பேரிடிக்கு ஒரு சமாதானமும் கூறத் தோன்ற வில்லை எனக்கு. இனி வேறென்ன எழுதுவது? படித்ததும். ஞாபகமாக இதைக் கிழித்தெறிந்து விடுங்கள்.

. - - . இப்படிக்கு, உங்களுடையவள்-அபலை

இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் உள்ளூரிலேயே இருந்து துளசியின் திருமணத்திற்குப் போயிருக்க வேண்டு. மென்று தோன்றியது சுகுணனுக்கு. அடுத்த கணமே. போகாமல் தான் வெளியூரில் போய்த் தலைமறைவானது தான் சரியென்று, தோன்றியது. அந்தக் கடிதம் அவனுள் உண்டாக்கிய உணர்ச்சிக் குழப்பத்தின் காரணமாக நிச்சய, மாய் நிர்ணயமாய் அவனால் எந்த உணர்விலும் காலூன்றி நிற்க முடியவில்லை. அந்தத் திருமணத்திற்கு அவன் வரா ததைக் காரியாலயத்திற்குப் போனதும் யார் யார், எப்படி எப்படி நேராகவும், குத்தலாகவும், விசாரிப்பார்கள் என்று. இப்போதே கற்பனை செய்ய் முயன்றான் அவன். அதையும் கூட அவனால் தொடர்ந்து நினைக்க முடியவில்லை.

கடிதத்தைக் கிழித்தெறியுங்கள்-என்று எழுதத். துணிந்ததிலிருந்து அவள் தன்னை எவ்வளவு அந்நியமாக. வும், அவநம்பிக்கையாகவும் எண்ணிப் பயந்திருக்க முடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/38&oldid=590404" இலிருந்து மீள்விக்கப்பட்டது