பக்கம்:நெற்றிக்கண்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி ვ 7°

என்று நினைத்தபோது அப்படி எழுதிய அவள் மேல் அவ: னுக்கு தாங்க முடியாத கோபம் வந்தது. கடிதத்தை, அவள் எழுதியது போல் கிழிக்கவில்லை. பத்திரமாகப் பெட்டியடி யில் வைத்துவிட்டுக் குளிக்கப் போனான். காரியங்கள் எப் போதும் போல் வழக்கமாக இயங்கின.

மனதைத் திடப்படுத்திக்கொண்டு காரியாலயத்திற்குப் போகிற வழியில் அவனுடைய முதலாளியும்-துள்சியின் தந்தையுமாகிய-மாருதி பப்ளிகேஷன்ஸ்-குரூப் ஆஃப் மாகவின்ஸ்-அதிபர் - நாகசாமியை - சாந்தோம் "ஹை. ரோடிலுள்ள அவர் வீட்டிற்குப்போய்க் கண்டு, பட்டும், படாமலும் கலியாணத்தன்று ஏன் வரவில்லை என்று அவர்' கேட்டதற்கு அவனால் ஏதோ சாக்குக் கற்பித்துச் சொல்ல முடிந்தது. அதுகூட அப்போது பொருத்தமாகவும் சொல்ல இயைபாகவும் வந்தது. நல்ல வேளையாக அவருடைய வீட் டில் அவரது முன் புறத்து அறையிலேயே காரியம் முடிந்து விட்டது. உள்ளே போகவேண்டிய அவசியமோ துளசியை யோ அவள் கணவனையோ பார்க்க வேண்டிய நிர்ப்பந்த மோ நேரவில்லை. நாகசாமி கச்சிதமாகப் பேசி ஒரு டிரிங் கும் வரவழைத்துக் கொடுத்துத் தாம்பூலப் பையோடு அவனை வழியனுப்பி வைத்தார். -

'உள்ளே போய்த் துளசியையும் பார்த்துவிட்டுப் போங்களேன். உங்கள் கதைகளின் முதல் ரசிகையாச்சே?’’ -என்று விடை கொடுக்கிற சமயத்தில் அவர் உபசாரமாகச் சொல்லிய வார்த்தையை,

'அதற்கென்ன அப்புறம் பார்த்துக்கொண்டால் போயிற்று, இந்த அவசரத்தில் எதற்கு?' என்று சுகுண னால் நாசூக்காகத் தட்டிக் கழித்துவிட முடிந்தது.

தாம்பூலப் பையோடு வாசலிலேயே முன்னுணர்வுடன் காக்க வைத்திருந்த டாக்சியில் ஏறிக்கொண்டு மாருதி பிரஸ்ஸுக்குப் போ-என்று ஊரறிந்த பேரறிந்த இடமும்

ந்ெ-3 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/39&oldid=590405" இலிருந்து மீள்விக்கப்பட்டது