பக்கம்:நெற்றிக்கண்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 0. நெற்றிக் கண்

"நீங்க ஒருத்தர்தான் வராத ஆளுசார்."

"எல்லா எழுத்தாளரும்கூட வந்திருந்தாங்க...முக்கா வாசி நாளு பெங்களுர்லியே கிடப்பாரே அந்தக் கவிஞர்: சார் கூட வந்திருந்தாருன்னாப் பார்த்துக்குங்களேன்...'

-சுகுணன் புன்முறுவல் செய்ய முயன்றான்.

"சரி போவுது. கொழந்தை கல்யாணப் படம் இந்த, இஷ்யூவிலியே வரணும். இதோ ஐயா படம் அனுப்பிச்சிருக் காரு...சைஸ் போட்டுக் கொடுங்க...மங்களகரமா யெல்லோ பார்டர் கட்டிடறேன். உங்க டம்மியிலே லீடர் ஃபாரத் திலே மூணாம் பக்கம் வலதுபுறம் மேலாக இதுக்கு அரைப் பக்கம் குறிச்சுக்குங்க சார்...' - *

-சுகுணனின் நீண்ட விரல்களோடு கூடிய அழகியல் வலதுகை ஓர் இயந்திரம்போல் எழும்பி முன் நீண்டு அந்தப் படத்தை வாங்கியது. நிச்சலமான முகத்துடன் தன் முகத், திற்குத் தனது பாவனையே முகமூடியாக்கிக் கொண் டாற்போல ஊடுருவும் கண்களால் அந்தப் புகைப் படத்தைப் பார்த்தான் அவன். எல்லாக் கல்யாணப் புகைப் படங்களைப் போலத்தான் அதுவும் இருந்தது. படத்தில் அவள்கூடத் தாராளமாகச் சிரித்துக் கொண்டுதான் நிற்கிறாள். -

இன்னா சார்! படத்தில் கொழந்தை ரொம்ப நல்லா சிரிச்சிக்கிட்டிருக்கில்ல?...'

பிரமாதமாயிருக்கிறது...'

"ஏன் சார்? ஊர்லேருந்து வந்தப்புறம் என்னவோ மாதிரியிருக்கிங்களே? என்ன விசயம்? உடம்புக்குச் சுகமில்லியா?" - : - r

-சுகுணன் இரண்டாவது முறையாகவும் புன்முறுவல்: புரிய முயன்று இயலாமல் தோற்றான். ஆனால் அதைச் சாதுர்யமாக மறைத்துக் கொண்டு படத்தின் பின்புறம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/42&oldid=590408" இலிருந்து மீள்விக்கப்பட்டது