பக்கம்:நெற்றிக்கண்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . - 4.i

சைஸ் அளவு குறித்து வழக்கம் போல் கையெழுத்தும் போடப் பேனாவை அருகில் கொண்டுபோய் விட்டுத் திடீரென்று மனம் மாறி, * 3

"கையெழுத்து இல்லாட்டிதான் என்ன?'-என்று வய்டத்தை அப்படியே நாயுடுவிடம் நீட்டினான்.

பிளாக் பண்ண அனுப்பு நாயுடு! ஐயாகூடக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஃபோன் பண்ணினார்...'

'சர்த்தான்! அப்புறம் வந்து பேசிக்கிறேன் சார் நீங்க் "மூட்லே இல்லே'... என்று ஏதோ தனக்குத் தோன்றி கயதைக் கூறிவிட்டுப் போனார் நாயுடு,

'மறுபடி ஃபோன் மணி அடித்தது. 'நான்தான் துளசி..." . - நீண்ட நேரம் விம்மி விம்மி அழுதபின் வருகிற தளர்ந்த -சாயலில் சோககீதமாய் ஒலித்தன வார்த்தைகள்.

ஒன்றும் பேசாமல் போனுடன் அப்படியே இருந்தான் சுகுணன். . -

நான் தான் துளசி.' -இப்போது அவள் அழுவதே தெளிவாக ஃபோனில் கேட்கிறது. -

கங்ராஜுலேஷன்ஸ்: இப்போதுதான் உங்கள் திருமணப் புகைப்படத்தை பிளாக் செய்ய அனுப்பி வைத் தேன். படம் ரொம்ப நன்றாயிருக்கிறது" என்று குத்த லாகச் செயற்கையானதும் புதுமையானதுமான மரியாதை யோடு அவளை விளித்துச் சொல்லிவிட்டுப் பட்டென்று டெலிபோன் ரெஸிவரை வைத்தான் சுகுணன். தன்னு டைய வார்த்தைகள் தான் நியமித்து அனுப்பிய கடுமை யோடு போய் அவளைத் தாக்கியிருக்கும் என்ற திருப்தி யோடும் ஆனால் அந்தத் திருப்திக்காகப் பெருமைப்படுவ தில் ஒத்துழைக்க மறுக்கும் கருணைமயமான அந்தரங்க மனத்தோடும் சிறிது நேரம் என்ன செய்ய வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/43&oldid=590409" இலிருந்து மீள்விக்கப்பட்டது