பக்கம்:நெற்றிக்கண்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நெற்றிக் கண்

- இராயபுரத்தில் எங்கோ ஒரு வாசகசாலை ஆண்டு: விழாவுக்குத் தலைமை வகிக்க வர முடியுமா என்று அந்த வாசகசாலைக் காரியதரிசி ஃபோன் செய்தார். அவரோடு ஃபோன் பேசியும் முடித்தாயிற்று. இன்னும் அவள் வர வில்லை. நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. மற்ற வேலை களை எல்லாம் நாளைக்கு வந்து பார்த்துக் கொள்ளலாம். புறப்பட்டுப் போய்விட வேண்டியது தான்’ என்று அவன் துணிந்து அங்கிருந்து புறப்படத் தயாராகி விட்ட சமயத். தில் டெலிபோன் மணி அடித்தது. காரியாலய முகப்பிலி ருந்த வரவேற்பு அறையிலிருந்து "துளசீம்மா வந்: திருக்காங்க...இதோ உங்க அறைக்கு வராங்க...' என்று டெலிபோன் ஆப்ரேடர் அ றி வி த் தா ள் . அவன் டெலிபோன் ரெஸிவரை வைத்து விட்டுத் தலை நிமிர் வதற்குள்ளாகவே அவனுடைய அறையை நடுவாக மறைத்துக் கொண்டிருந்த ஸ்பிரிங் கதவுகளின் கீழே நலுங்கிட்ட சிவப்பு மறையாத தந்தப் பாதங்கள் இரண்டு தயங்குவது தெரிந்தது. புடவையின் சரிகைக் கரைக்குக் கீழே தந்த வார்ப்புக்களாய்த் தெரிந்த அந்தப் பாதங்களில் அவை. இப்போது வேறு யாருக்கோ சொந்த மென்று சிவப்பு மையினால் அடிக் கோடிட்டுக் காட்டினாற். போல நலுங்கு இட்டிருந்தார்கள். பளிங்கின் வெண்மை நிற மெருகினால் மின்னும் அந்தச் சிறிய பாதங்கள் வெண்ணிறம் முடிந்து நலுங்கு இட்ட செம்பஞ்சுத். குழம்பின் தழல் நிறம் அடியாகக் கோடு பற்றியிருந்த இடச் தில் மெட்டியோடு மனத்தைக் கொள்ளையிடும் ஓர் அழகு புலப்பட்டுத் தெரிந்தது. தன்னிலிருந்து அந்நியமாகி விட்ட அந்த அழகுக்கு ம்ரியாதை செய்வதுபோல் அவன் பார்வை பிரிந்து விலகி நிமிர்ந்தது. நேரெதிரே ஸ்பிரிங் கதவின் மேல் வளைந்து நெளிந்து முடிச்சுப் போன்ற மோதிரம் அணிந்த மெல்லிய அழகிய நீண்ட பொன் நிற விரல்கள் பற்றி அதைத் திறந்தன. 'உள்ளே வரலாமா?’’. அவள் கேட்ட கேள்வியில் துயரம் முட்டிக் கொண்டு நிற்பது. தெரிந்தது. பதில் சொல்வதற்கும் விருப்பமில்லாமல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/48&oldid=590415" இலிருந்து மீள்விக்கப்பட்டது