பக்கம்:நெற்றிக்கண்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 47

அலட்சியப் படுத்துவதற்கும் துணிவில்லாமல் சில விநாடி க்ள் மெளனம் சாதித்தான் சுகுணன். திருமணம் முடிந்த சுவடு நீங்காமல்-மணக் கோலத்தின் அழகும் பொலிவும் அவற்றைவிடப் பெரிதாக முகத்திலும் கண்களிலும் வந்து தெரியும் சோகமுமாக-அவள் துவண்டு நிற்பதைக் கண்டு கோபமும் கருணையும், ஒளியும் நிழலும் போல மாறி மாறித் தோன்றும் மன நிலையில் இப்படி ஓர் அசந்தர்ப் பத்தை தங்களுக்குள் ஏற்படுத்திய விதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சுகுண்னுக்கு. இதற்கு முன்னால் பல முறை துளசி கலீர் கலீரெனச் சிரித்துக் கொண்டே புள்ளி மானாகத் துள்ளிக் குதித்து ஓடிவந்து உரிமையோடும், சுதந்திரத்தோடும் தன் அறைக்குள் நுழைந்திருப்பதையும் இன்று அவளே தன் எல்லையைத் தானே பிரித்து நிறுத்திக் கொண்டவளைப் போல் தயங்கி நிற்பதையும் அந்த ஒரு விநாடியில் இணைத்து நினைத்தான் சுகுணன். மறுபடி துயரம் கனத்துப் போய் அழுகை கன்றியிருந்த அவள் குரல் அவன் செவிகளில் ஒலித்தது:- .

'உள்ளே வரலாமா?’’

"ஆகா! தாராளமாக வரலாம். உங்களுடைய அலு: வலகம் இது. நீங்கள் இங்கே வரக்கூடா தென்று சொல்ல நான் யார்' ...மிகவும் சுபாவமாகச் சொல்வது போல் சொல்லப்பட்ட தன்னுடைய இந்த வார்த்தைகள் எத்தனை கடுமையாக, எத்தனை ஆழமாக அவளைப் போய்த் தாக்கும் என்பது தெரிந்துதான் அவன் இப்படிப்பேசியிருந் தான். அவள் மெல்ல நகர்ந்து-அவன் முகத்தை ஏறிட்டுப். பார்த்துப் பதில் சொல்வதற்குத் தைரியமில்லாதவள் போல் உள்ளே நுழைந்து ஒதுங்கி நின்றாள். அவளோடு அவள் உள்ளே துழையும் போதே மங்கலமும் நிறைந்ததொரு நறுமணமும் உடனிகழ்ச்சியாக உள்ளே துழைந்து நிறைந்தது. மனத்தை மிக மோகனமான நினைவுகளில் சாரச் செய்து சுழற்றிச் சுழற்றி மயக்கும் நறுமணம் அது. அந்த நறுமணமும், உள்ளே நுழைவதற்காக அவள் நாலைந்து முறை அடிபெயர்த்து வைத்த போது கினிங்",

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/49&oldid=590416" இலிருந்து மீள்விக்கப்பட்டது