பக்கம்:நெற்றிக்கண்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

நான் தனியே தீபம் இலக்கிய மாத இதழைத் தொடங்கிய பின்பு அதில் எழுதிய முதல் சமூக நாவல் நெற்றிக்கண். இந்திய நாட்டில் சராசரி உழைக்கும் பத்திரிகையாளனுக்கு (Working Jour. nalist) எந்த அளவு சுதந்திரமும், உரிமையும் கிடைக்கின்றன என்பதை ஓரளவு இந்த நாவலிலே சொல்ல முயன்றிருக்கிறேன். ஒரு பத்திரிகை யாளனைப் பற்றிய தமிழ்ச் சமூக நாவல் இது. ஒரு பத்திரிகையாளனின் அகப் போராட்டங்களும், புறப் போராட்டங்களும் இதில் வருகின்றன. இதில் நெகிழ்ச்சி மயமாக வந்து வாசகர்களை நெகிழவைக்கும் பாத்திரம் துளசிதான் : சுகுன னைக் காட்டிலும் துளசிதான் வாசகர்களை அதிகம் உருக்க முடியும் என்று இந்த நாவல் தீபத் தில் நிறைவு பெற்றபோது எனக்கு வந்த ஏராள மான கடிதங்களிலிருந்து தெரிந்தது. என் மற்ற நாவல்களிலிருந்து இது பல அம்சங்களில் தனியாக விலகி நிற்கிறது. ஒரு பத்திரிகையாளனுடைய கண்ணோட்டத்தில்தான் தமிழ்நாட்டுச் சமூக வாழ்வு இந்த நாவலில் நோக்கப்பட்டிருக்கிறது. நாவலைப் படிப்பவர்களும் அதை மனத்தில் கொண்டு படித்தால் நல்லது என்ற வேண்டு கோளுடன் இந்த முன்னுரையை முடிக்கிறேன். இந்நூலை இப்போது வெளியிடும் தமிழ்ப் புத்தகா லயத்தாருக்கு என் மனங்கனிந்த நன்றி.

அன்பன் நா. பார்த்தசாரதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/5&oldid=590371" இலிருந்து மீள்விக்கப்பட்டது