பக்கம்:நெற்றிக்கண்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.48 நெற்றிக் கண்

'கிணிங்", என்று தாளமிட்ட அவள் கால் மெட்டிகளின் ஓசையும் இன்னும் அவன் நாசியிலும் செவிகளிலும் நிறைந்து விட்ட ஞாபகமாக நின்றன. இருவருக்குமிடையே நிலவிய அந்த மெளனத்தை அவனாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. -

- "ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்களேன் இப்படி'என்று மிகவும் சுபாவமாகப் பேசுவதுபோல் சுபாவமில்லாத புதிய மரியாதைகளை அவளுக்கு வழங்கி அதன் மூலமாகவே ஓர் அந்நிய பாவத்தை அவள் அறியும்படி செய்தான் சுகுணன். பதில் ஒன்றும் சொல்லாமல் அவனெதிரே வந்து போகிற பார்வையாளர்கள் உட்காருவதற்காகப் போடப் பட்டிருந்த நாற்காலியில் உட்காரவும் செய்யாமல் மேலே போக வழியில்லாத இடத்தில் புகுந்துவிட்ட பூந்தென்றல் போல அலைந்து அசைந்து ஒதுங்கி நின்றாள் அவள், ஒரு காலத்தில் இந்த முகத்தைத் துரண்டுதலாகக் கொண்டு இந்தக் கருமை துறுதுறுக்கும் வண்டுக் கண்களில் பார்வை கலந்து-இவற்றை இரசித்த மோகத்தோடு தான் # Jrriq. [L1, -

கோல முகமதியிற் சிறுகாணக் குங்குமப் பூச் சிவந்து நீல விழிமலரிற் சில கோடி கெஞ்சி னுரை யுவந்து கால மளந்திடும் சிறுபோதிற்

காவிய மனைத்தும் யோகி

-ன்ன்ற வரிகள் இப்போது நினைவு வந்தன அவனுக்கு. வரந்தர வேண்டிய நேரத்தில் ஏமாற்றிவிட்ட தேவதையை உபாசித்துவிட்ட அப்பாவிப் பக்தனாகத் தான் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. எதிரே வந்து நிற்கும் அவள்மேல் ஆத்திரமேற்படவோ, இரையவோ அவனுக்கு வாய் வரவில்லை. காரணம் அவள் வந்து நிற்கிற அலுவலகம் அவளுடைய தந்தையினுடையதென்பதோ அவள் இன் :னொருவருடைய மனைவியாகி விட்டாள் என்பதோ மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/50&oldid=590417" இலிருந்து மீள்விக்கப்பட்டது