பக்கம்:நெற்றிக்கண்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 4.9

அன்று. உணர்ச்சியையும் மீறி அந்த விநாடி அவனுள் சுரந்த கருணை தான் காரணம். இலக்கியத்தில் மிக உயர்ந்த குணம் கருணை தான். நதிகளைப்போல் பெருகும் கோபம், தாபம், வீரம், தீரம், ஆசை. பாசம் எல்லாம் போய்ச் சங்கமமாகிற பரந்த இலக்கியக் குணம் கருணை யாகிய கடல்தான் என்பதை உலக மகாகவிகள் எல்' லோரும் நிரூபித்திருக்கிறார்கள் -என்று பல இலக்கியக் கூட்டங்களில் தானே பேசியிருப்பது நினைவு வந்தது. அவனுக்கு. மேலே அலைபாய்ந்து பொங்கினாலும் அடி. யூற்றைப்போல் சுரக்குமிடம் தெரியாமல் பெருகும் இந்தக் கருணையைத் தன்னால் தவிர்க்க முடியவில்லை என்பதை அப்போது அவனே உணர்ந்தான். நலுங்குச் சாயம். புலராத அந்த மோதிரக் கையிலிருந்து கண்ணிரால், கசங்கிய ஒரு கிரீட்டிங் கவர்' வந்து அவன் மேஜைமேல், உதிர்ந்தது. - -

'இதைவிட அதிகமாக என்ைைச் சித்திரவதை செய் வதற்கு வேறு வார்த்தைகள் ஏதும் உங்களுக்குக் கிடைக்க வில்லை போலிருக்கிறது...?' .

"வெறும் வார்த்தைகளில் என்ன இருக்கிறது? இந்த உலகில் யார் அவற்றைக் காப்பாற்றி மதித்து மரியாதை, செய்கிறார்கள்? கேவலம்-மறப்பதற்குச் சுலபமுள்ள பல வீனமான சத்தியங்கள் அவை. வார்த்தைகளை நாம் மதிப் பதைச் செயலினால் மட்டுமே நிரூபிக்க முடிகிற உலகம் இது செயலினால் நிரூபிக்க முடியாதவர்கள் வெறும் வர்ர்த்தைகளைப் பற்றிப் பேசி என்ன ஆகப் போகிறது...?’’ -

'அபலைகள் மிகப் பல சமயங்களில் தங்களையே காப் பாற்றிக் கொள்ள முடிவதில்லை. வார்த்தைகளைக் காப்பது எப்படி? எல்லாம் தெரிந்த நீங்களே என் வேதனை புரியாமல் இப்படி வார்த்தைகளால் என்னை வதைக்கலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/51&oldid=590418" இலிருந்து மீள்விக்கப்பட்டது