பக்கம்:நெற்றிக்கண்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நெற்றிக் கண்

உங்களை வதைப்பதற்குக் கடைசியாக என்னிடம் மீதமிருக்கிற ஒரே ஒரு கெளரவமான ஆயுதம் வார்த்தை தான்.'"

துளசி என்று வாய் நிறையக் கூப்பிட மாட்டீர்களா? ஏன் இந்த உங்களை’. நீங்கள் எல்லாம் போடுகிறீர்கள்: நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இப்படி?’’

"உன் மனத்தைக் கேள்! என்ன பாவம் செய்தாய் என்பதை அது சொல்லும் உனக்கு."

-சுகுணன் எவ்வளவோ கடுமையாக இருக்க முயன்றும் அவன் மனத்தினுள் அடியூற்றாகச் சுரந்த கருணை அவனை வென்று விட்டது. இம்முறை. உங்கள் மனத்தைக் கேளுங் கள்-என்று தான் கடுமையாகச் சொல்ல நினைத்தான் அவ்ன். ஆன்ால், "உன் மனத்தைக் கேள்-என்றுதான் சொல்ல் வந்தது. அந்த ஒரு வினாடி வெற்றி அவள் மனத்தில் பூச்சொரிந்திருக்க வேண்டும். அதற்கு அடை யாளமாக அத்தனை வேதனையிலும் அவள் முகம் ஒரு விநாடி மலர்ந்தது. - -

மேலே அவளிடம் ஒன்றும் பேச விரும்பாதவனைப் போல, மேஜைமேல் அவள் வைத்திருந்த அந்த கிரீட்டிங் கவரை எடுத்துப் பிரித்து, 'வீரர்களின் தோள்களை அலங் கரிக்க வேண்டிய-' என்ற தன்னுடைய அந்த வாச - கத்தை யாரோ ஒர் அந்நியன் புதிதாகப் படித்துப் பார்ப்பது போல் மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு அதை அப்படியே ஏழெட்டுத் துண்டுகளாக உறையுடன் கிழித்துத் தனக்குக் இழே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டான் சுகுணன்: அதற்க்ாகவே காத்திருப்பவள் போல் அவள் சீறத் தொடங்கினாள்:

எழுதிய வார்த்தைகளைக் கிழித்தெறிந்து விடுவது. சுலபம். ஆனால் இப்போது நீங்கள் கிழிப்பதற்கு முன்பே அது உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருத்தியின் மென்மை யான மனத்தைக் குத்திக் கிழித்திருக்கிறதென்பதை நீங்கள். உண்ரப் போவதில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/52&oldid=590419" இலிருந்து மீள்விக்கப்பட்டது