பக்கம்:நெற்றிக்கண்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 5 真

ஒர் இலக்கிய ஆசிரியன் என்ற முறையில் நான் நினைப் பதையும், படைப்பதையும் வெளியிடத் துணை நிற்கும் என் மொழியைத் தவிர எனக்கு வேண்டியவர்கள் யாரு மில்லை...நான் இந்த வாக்கியங்களை எழுதும்போது என் மனம் எவ்வளவு புண்பட்டு எழுதினேன் என்பதுதான் எனக்கு இப்போது நினைவிருக்கிறதே ஒழிய, இது யாரைப் போய்ச் சேருமோ அவர்கள் உணர்வுகளின் விளைவுகளைப் பற்றி நினைக்கவோ, அதுமானிக்கவோ எனக்கு அவகாச

மில்லை! அவசியமும்கூட இல்லை...' - -

'அவ்வளவு வித்தியாசமாக உங்களால் இருக்கமுடியு மானால் நீங்கள் ஆபட்ஸ்பரிக்கே வந்திருக்கலாமே?”

"எதற்கு? உன் மணக்கோலத்தைப் பார்க்கத்தானே? அது எனக்கு அத்தனை அவசியமான காரியமில்லை. நம்பிக் கைத் துரோகம் செய்கிறவர்கள் எந்தக் கோலத்தைப் புனைந்து கொண்டாலும் அதனால் அழகாயிருக்க முடியா தென்று எனக்குத் தெரியும்...துளசி!' - * , ,

"......இது அபாண்டம்! எந்த நம்பிக்கைக்கும் நான் துரோகம் செய்யவில்லை. ஏதோ ஒர் அசந்தர்ப்பத்தினால் என்னுடைய நம்பிக்கையே எனக்குத் துரோகம் செய்து விட்டது. இப்போது இவ்வளவு பேருக்கு நடுவில் இந்த இடத்தில் என்னைப் பொறுக்க முடியாமல் கதறி அழவைக்க வுேண்டுமென்று உங்களுக்கு ஆசையாயிருக்கிறது போலத் தோன்றுகிறது. அதனால்தான் இப்படி எல்லாம் பேசு கிறீர்கள்...' . . . . . - 'தவறு, எனக்கு எந்த ஆசையும் கிடையாது. உன்னை மகிழ்விக்கவோ, உனக்கு ஆறுதலுரைக்கவோ எப்படி எனக்கு ஆசை கிடையாதோ, அப்படியே உன்னை அழ வைக்கவும் எனக்கு ஆசை. கிடையாது. அப்படி ஆசைப்பட எனக்கு உரிமையும் கிடையாது. நமக்குள் இப்படியெல்லாம் பேசிக் கொள்ள இடமிருக்க வேண்டாம் என்பதற்காகத் தான் நீ ஃபோன் செய்தபோதே உன்னை இங்கே வரக்கூட்ா தென்று கண்டிப்பாகச் சொன்னேன்..." . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/53&oldid=590420" இலிருந்து மீள்விக்கப்பட்டது