பக்கம்:நெற்றிக்கண்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி § 3

இருந்தன. திடீரென்று துளசியை அங்கே கண்ட ஆச்சரியம் அடங்க இரண்டு விநாடிகளுக்கு மேல் ஆயிற்று தாயுடுவுக்கு. - • * .

'வாம்மா குழந்தை! ஏன் கலியானத்துக்கு வரல் லேன்னு சாரைக் கேட்டியாம்மா? அதைவிட இவருக்கு வேறே அப்பிடி இன்னா தலை போற காரிய

மிங்கறேன்?' -

'நீங்கதான் கேட்கணும் நாயுடு......' என்று துளசி செயற்கையாகச் சிரிக்க முயன்றாள். சுகுணன் இவர்கள் இருவரையுமே பொருட்படுத்தாது போல் நாயுடு கொண்டு வந்திருந்த அச்சுத்தாள்களில் மூழ்கத் தொடங்கினான்.

'அடடே! இதென்னம்மா நின்னு கிட்டே இருக்கிறேஉட்காரு சொல்றேன்... -என்று துளசி அதுவரை தின்றதை வியந்தபடி ஒரு நாற்காலியை அவளருகே ஒதுக்கினார் நாயுடு.

பரவாயில்லை நாயுடு! நான் உட்காரப் போவதில்லை. உங்க சார் நான் இங்கே உட்காருகிற மாதிரி இடங் கொடுத்துப் பேசவில்லை...' -

"இவர் கிடக்கிறாரு, காலைலேருந்து ஒரு மாதிரித்தான் இருக்காரு...' -

இப்போதும் சுகுணன் தலைநிமிரவே இல்லை. 'உன் கலியான போட்டோ வந்திருக்குது குழந்தை! சார்கிட்டக் கொடுத்து சைஸ் கூடப் போட்டு வாங்கி யாச்சு, இந்த வாரமே பூம்பொழில்லே போடப் போறோம் அதைக் கொண்டாரட்டுமா? பார்க்கிறியா

துளசி ஒருவிநாடி தயங்கினாள். அவள் முகத்தில் மலர்ச்சி மறைந்தது. பின்பு நிதானமாக நாயுடுவிடம் கூறினாள் :- -

"ம்.கொண்டாங்க... நாயுடு ஓடினார். -ஐந்தே நிமிடங்களில் நாயுடு படத்தோடு வந்தார். துளசி அதைக் கையில் வாங்கி வைத்துக் கொண்டாள்.

நெ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/55&oldid=590422" இலிருந்து மீள்விக்கப்பட்டது