பக்கம்:நெற்றிக்கண்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நெற்றிக் கண்

போக வந்தது போல் தமிழ் நாளிதழ் காலை மலர்ஆசிரியரிடம் பத்து நிமிடம், மாத இதழ் மல்லிகை ஆசிரியரிடம் பத்து நிமிடம், ஆங்கில தினசரி மெட்ரோ பாலிடன் டைம்ஸ்’ ஆசிரியரிடம் பத்து நிமிடம் என்று. எல்லோரிடமும் பேசிவிட்டு இந்த வரவைப் பொதுவாகவும். சாதாரணமாகவும் செய்து விட்டுப் போகலாம் இவள். இங்கேயே நின்று என்னிடம் மட்டுமே கண்களைக் கசக்கிக் கொண்டு உருகினால் நாளைக்கு இவர்கள் கூடிக்கூடி வம்பு. பேச இதுவும் ஒரு நிகழ்ச்சியாகி விடுமென்பது ஏன் தான் இவளுக்குப் புரியவில்லையோ?" என்றெண்ணி வருந்தி. னான் சுகுணன். - .

பெண் இயற்கையாகவே பேதை, மனம் பலவீனமா யிருக்கிற வேளைகளில் அவள் இன்னும் அதிகத் தடுமாற்ற: முள்ள பெரும் பேதையாகி விடுகிறாள் என்பதைத் தவிர அப்போது வேறெந்த முடிவுக்கும்.அவளைப் பற்றி அவனால் வரமுடியவில்லை. ஏற்கெனவே அவன் துளசியின் திருமணத் தன்று வெளியூர் போய்விட்டதை வைத்துக் கொண்டு அதற்குத் தனியாக ஏதோ ஒர் அர்த்தம் கற்பிக்க முயலுகிற, வர்களைப் போல் நோடபிள் ஆப்லென்ஸ்- என்று அவனிடமே அளக்கிறவர்களால் அவன் ஊர் திரும்பிய முதல் நாள் காலையிலேயே துளசி அலுவலகத்துக்கு அவனைத் தேடிவந்து கண் கலங்கி நின்றாள் என்பதை வலு வான செய்தி ஆதாரமாக வைத்துக் கொண்டு என்னென்ன வெல்லாமோ பேசமுடியுமே! இதை நினைத்து அவன் தயங்கினான் என்றாலும் ஏதோ வேண்டாத பொருளைப் பிடித்து வெளியே தள்ளுவதைப் போல் துளசியை வலுவில் வெளியே அனுப்பவும் கடிந்து பேசவும் கூட அவனுக்குத் துணிவில்லை. இப்படி அவன் எண்ணிக் கொண்டிருக்கும் இதே வேளையில் துளசியின் மனத்தினுள்ளும் இதே விதமான நினைவுகள் நிலவியிருந்தன போலும். அது அவள் பேசிய வார்த்தைகளிலிருந்து தெரிந்தது. தன்னுடைய அந்த வேண்டுகோளை மிக மிக விநயமாக அவனிடம் வெளி பிட்டாள் அவள். -- - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/58&oldid=590425" இலிருந்து மீள்விக்கப்பட்டது