பக்கம்:நெற்றிக்கண்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நா. பார்த்தசாரதி 57

'தயவு செய்து ஒரு பத்து நிமிஷம் எனக்கு அனுமதி தாருங்கள். நான் இன்று இங்கே வந்தது எல்லாருக்கும் தெரியும். காலை மலர் சர்மாவையும், டைம்ஸ் நாயரை யும், ரங்கபாஷ்யம் சாரையும் இரண்டிரண்டு நிமிஷம் பார்த்ததாகப் பேர் பண்ணிவிட்டு வந்து விடுகிறேன். வீண் வம்புக்குஇடம் வைப்பானேன்?" என்று துளசி கூறியபோது அவளும் தானும் நினைவில்கூட ஒன்றாயிருப்பதை எண்ணி உள்ளுற மகிழ்ந்தான் அவன். நட்பிலும்,காதலிலும் இரண்டு பேர்ஒன்றாக நினைக்கிறோம்-என்ற உணர்வே பெருமிதம் தருகிறதென்று தோன்றியது அவனுக்கு. ஆயினும் அவ ளுக்கு அவன் கூறிய பதில் தன் கோபத்தை விட்டுக் கொடுக் காமல் இருந்தது.

"நான் யார் உனக்கு அநுமதி கொடுப்பதற்கு? இரண்டு நிமிஷம்தான் பேசிவிட்டு வரவேண்டுமென்று கண்டிப்பு ஒன்றுமில்லையே. நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். யாரோடு வேண்டுமானாலும் பேசலாம்.'

"நான் யாரென்று சுலபமாகக் கேட்டுவிட முடியும் உங்களால், நான் பெண். அத்தனை சுலபமாக எல்லா வற்றையும் மறந்து நான் என்னைப் பிரித்துக் கொண்டுவிட முடியாது. ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்குக் கட்டுப்பட் டிருப்பதாக எண்ணும் உணர்ச்சியை இன்னும் விட்டுவிட முடியாத காரணத்தால்தான் உங்களிடம் அநுமதி கேட் கிறேன். எனக்கு அவர்களையெல்லாம் பார்த்து ஆகவேண் டியது ஒன்றுமில்லை. இங்கே இன்று நான் வந்தது உங்களை பார்க்க மட்டும்தான் இதை என் இதயம் அறியும். நீங்க ஆளும் அறிவீர்கள். ஆனால் மற்றவர்கள் இதை வைத்துக் கொண்டும் வம்பு பேசுவார்கள் என்பதால் என்னுடைய இந்த வரவை ஒரு பொதுக் காரியமாக்குவது போல் கடனே என்று அவர்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. பார்த்து விட்டு மறுபடியும் இங்கு உங்களிடம் வருவேன்-' - "'என்னிடம் எதற்கு? இன்னும் இங்கு என்ன மீதமிருக் "கிறது?"- - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/59&oldid=590427" இலிருந்து மீள்விக்கப்பட்டது