பக்கம்:நெற்றிக்கண்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை,

புகழ்பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான நா. பார்த்தசாரதி எழுதிய நெற்றிக் கண்” என்னும் இந்நாவல், அவரது 'தீபம்’ இதழில்

தொடர்ந்து வெளிவந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றதாகும்!

"ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒரு. வர்க்கும் மற்றொருவர் அர்ப்பணமாகி விடுகிற, நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச் சாலைகளில் பக்தி சிரத்தையோடு அவியாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப்போல் உள்ளேயே கணிகிறது. வாழ்வின் சோர்வுகளில் அது அவிவ தில்லை; நீறு மட்டுமே பூக்கிறது." -

இப்படி எண்ணும் ஒரு நிலைக்கு வந்துவிட்ட

இலட்சியப் பத்திரிகாசிரியன். தன்னை நோக்கிச்

சமூகத்திலிருந்து திறக்கும் எத்தனையோ நெற்றிக் கண்களைப் பொறுத்துக்கொண்டு வெம்பி விழுந்து விடாமல் வாழ வேண்டும் என்ற தத்துவத் தைக் கொண்டு தீட்டப்பெற்ற சுவைமிக்க நவீனம் இது!" இந்நவீனத்தில், நம் உள்ளத்தைப் பெரிதும் கவர்ப

வளாக, நமது அதுதாபத்திற்கு உரியவளாக இருப்பவள் துளசியே! அரிய பாத்திரப் படைப்பு!

படித்துப் பாருங்கள் . . . .

. இதனை வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்கு. அளித்த திரு. நா. பார்த்தசாரதி அவர்கட்கு. எங்கள் நன்றி உரியது. தமிழ்ப் பெருமக்களின் ஆதரவைப் பெரிதும் விரும்புகின்றோம். .

தமிழ்ப் புத்தகாலயத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/6&oldid=590372" இலிருந்து மீள்விக்கப்பட்டது