பக்கம்:நெற்றிக்கண்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நெற்றிக் கண்

சுகுணனின் இந்தக் கேள்வி துளசியைக் கண்கலங்க வைத்தது.

'திடீரென்று என்மேல் உங்களுக்கு இத்தனை உதா சீனம் பிறப்பானேன்? கொஞ்சம் ஆதரவைப் பிச்சையிட மாட்டீர்களா?- என்று கேட்பவள் போல் கலங்கிய கண் களுடன் அவன் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள் அவள்.

"நீங்கள் கண்டிப்பாக இங்கு இருக்கவேண்டும். கால் மணி நேரத்தில் மறுபடியும் நான் உங்கள் அறைக்கு வரு. வேன். உங்களிடம் எனக்கு இன்னும் கொஞ்சம் பேச வேண்டும். ’’ .

'பேசி என்ன ஆகப்போகிறது துளசி: இப்படி குழந்தை போல் கண்கலங்காமல் இருக்க உனக்குத்தான் இனிமேல் நிறைய மனோதிடம் வேண்டும்.'

! உங்களைப் போல் திடீரென்று பழகியவர்களை வெறுக்கவும் உதாசீனம் செய்யவும் துணிகிற அளவு: அத்தனை மனோதிடம் எனக்கு இல்லைதான்...'

'ஏன் இல்லை? படிப்படியாக எல்லாம் வரும் உண்மை யில் பார்க்கப் போனால் இந்த ஏமாற்றமோ, சோகமோ என் முன் பிழியப் பிழிய அழுவதைவிட வேறு எந்தவிதத்தில் உன்னைப் பாதித்திருக்கிறது துளசி? பார்க்கப் போனால் கோடைக்கானலுக்கு "ஹனிமூன்’ போக ஏற்பாடு செய்.

வதைக் கூடப் பாதிக்காத சோகம் இது.'

இப்படி சொல்லிக் குத்திக் காட்டியவுடன் தான் செய். தது தவறு என்பதுபோல் உதட்டைக் கடித்துக்கொண் டான் சுகுணன். அவள் முகம் அதைக்கேட்டு வாடியது. அந்த முகம் வாடிய விதத்தைப் பார்த்ததும் தான் ஆத்திரத்: தில் அவசரப்பட்டு விட்டதைச் சுகுணன் உணர்ந்தான். 'அவளோ மிக நிதானமாக அந்த வருத்தத்தை அங்கீகரித்துக் கொண்டு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளைப் போல் சுகுண னுடைய மேஜையில் இருந்த டெவிபோனை எடுத்தாள். அந்த மேஜையிலிருந்த இரண்டு டெலிபோன்களில் ஒன்று: காரியாலய எக்ஸ்சேஞ்சுடன் இணைந்தது. மற்றொன்று நேரே அங்கிருந்தே டயல் செய்ய முடிந்த தனி டெலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/60&oldid=590428" இலிருந்து மீள்விக்கப்பட்டது