பக்கம்:நெற்றிக்கண்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 61

-துளசி அறையிலிருந்து வெளியேறிச் சென்ற பின்பும் இநீண்ட நேரம் இந்தக் கேள்வி சுகுணனின் செவிகளிலும் மனத்திலும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

"இவளை நான் மறக்க வேண்டும்: அல்லது இவள் என்னை மறக்கவேண்டும்! இந்தப் பாழாய்ப்போன மனி

வாழ்க்கையில் சில உணர்ச்சிகளில் ஏமாறினாலோ,. ஏமாந் றப்பட்டாலோ, அந்த உணர்வையும் அதிலடைந்துவிட்ட ஏமாற்றத்தையும் மறப்பதற்கு வேறு மாற்றுணர்வே கிடைப்பதில்லை. அதில் காதலும் ஒன்று போலும்'-என்று இப்படி அவன் எண்ணிக்கொண்டிருந்தபோது ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு இன்னும் சில அச்சகத்து ஊழியர் களோடு வந்து எதிரே நின்றார். - - எதையோ வேண்டி, ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வருகிற நிலையில் இப்போது அவர்கள் வந்து நிற்பதாகத் தோன்றியது சுகுணனுக்கு. சில சமயங்களில் ஏதாவது ஒரு கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்றோ செர்ற் பொழிவு செய்ய வேண்டுமென்றோ கேட்க வருகிறவர்கள் இப்படிப்பட்ட தயக்கத்தோடுதான் வருவது வழக்கம்,

சுகுணன், நாயுடுவின் முகத்தைப் பார்த்தான், பேச வந்ததைப் பேசலாமே என்று எதிரே நிற்பவரின் சொல்லை வரவேற்பது போன்ற புன்முறுவலொன்று அவன் இதழ் களில் மலர்ந்தது. - -

"கொழந்தை புறப்பட்டுப் போயிடிச்சுங்கள்ா?' என்று துளசியைப் பற்றி விசாரித்தார் நாயுடு, --

இந்தக் கேள்வியைப் பெரிதாக இலட்சியப்படுத்திப் பதிலும் சொல்ல விரும்பாமல் ஒரேயடியாக அலட்சியப் படுத்திப் பதில் சொல்லாமலிருக்கவும் விரும்பாமல், "பக்கத்து அறைக்குப் போயிருக்கிறாள்' என்று சொல்வது போல் "காலை மலர்' சர்மாவின் அறைப்பக்கமாகக் கையைச் சுட்டிக் காண்பித்தான் அவன். நாயுடு அதோடு விடவில்லை. மேலும் கேட்டார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/63&oldid=590431" இலிருந்து மீள்விக்கப்பட்டது