பக்கம்:நெற்றிக்கண்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நெற்றிக் கண்

"கொழந்தை மறுபடி இங்கே வருங்களா?”

' வரவேண்டிய அவசியமோ காரியமோ ஒன்றுமில்லை. ஆனால் வந்தாலும் வரலாம்.’’

சிறிது நேரத் தயக்கத்திற்கும், மெளனத்துக்கும் பிறகு, நாயுடு மீண்டும் மெல்லப் பேச்சைத் தொடங்கினார்.

"'உங்க கிட்டத்தான் ஒரு காரியமா வந்தோம்: சார்...'

"சொல்லுங்க...என்ன காரியம்?’’

"கொழந்தைக்கும், மாப்பிள்ளைக்கும் வர ஞாயித்திக் கிழமை சாயங்காலம் நாங்க பிரஸ் ஒர்க்கர்ஸ் எல்லாருமா உட்லண்ட்சிலே ஒரு விருந்து கொடுக்கலாம்னு எண்ணி யிருக்கோம்...' -

'ரொம்ப சரி! செய்ய வேண்டியதுதான்...' 'அதுக்கு......'

"அதுக்கு.........' "நீங்கதான் தலைமை வகிக்கணும்'

இந்த ஒரே வாக்கியத்தை-இந்த'ஒரே வேண்டுகோளை நாயுடுவோடுகூட வந்திருந்த எல்லோருமே சேர்ந்து "கோரஸ்" பாடுவதுபோல் ஒன்றாகச் சொல்வி வேண் டினார்கள்.

மறுபடியும், மறுபடியும் தான் விலக விரும்பிய வழிக்கே தன்னை இழுத்துக் கொண்டு போக வருகிற மனிதர்களை யும் நிகழ்ச்சிகளையும் அந்தரங்கமாகச் சபித்தவாறே அந்த, வெறுப்பின் காரணமாக ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் மலைத்துப் போய் மெளனமான துயரம் உள்ளே வெதுப்ப, அது வெளியே தெரிந்துவிடாமல் மறைக்க முயன்றபடி அவர்கள் முகத்தை ஒவ்வொன்றாக, ஏறிட்டும் பார்க்கலானான் சுகுணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/64&oldid=590432" இலிருந்து மீள்விக்கப்பட்டது