பக்கம்:நெற்றிக்கண்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நெற்றிக் கண்

அவள் கணவர் ஏதோ சினிமாவுக்கு முதல் ஆட்டம் டிக்கட்டை வாங்கி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் - என்று அவள் தந்தை நாகசாமி ஃபோன் செய்தார்.

சுகுணன் உடனே காரியாலய முகப்புவரை விரைந்து போய் அங்கே காரில் புறப்படத் தயாராயிருந்த துளசியிடம் கையைக் காண்பித்துக் காரை நிறுத்தி அதை அப்படியே தெரிவித்தான். கணவன் சினிமா டிக்கெட்டோடு வீட்டில் காத்திருப்பதாக அவன் வந்து தெரிவித்ததைக் கேட்டு ஒன்றும் தோன்றாமல் இரண்டு கணம் ஸ்டியரிங்கில் கை வைத்தபடியே இருந்தாள் அவள். பிறகு கீழே இறங்கி ஒருகணம் நின்றாள்.

சுகுணனோ தகவலைத் தெரிவித்துக் கடமை முடிந்து விட்டது போல விரைந்து உள்ளே திரும்பி வட்டான். சந்திக்காமலிருந்த சில நாட்களைவிட இன்று சந்தித்த பின்டே இருவருக்கும் இடையே அதிகத் தொலை வும் பிரிவும் பிறந்துவிட்டது போன்ற உணர்வுடன் இருவரும் பிரிந்தனர். -

கார் திரும்பியபோது உள்ளே வேகமாக விரையும் அவன் உருவை அவள் ஒரு வினாடி பார்த்தாள். கண்களில் நீர் பனித்தது. ஓர் இயந்திரம்போல் அவள் கால் இயங்கி வேகவிசையை மெல்ல அழுத்தியது. கார்நகர அவளும்

சென்றாள்.

ஐந்தரை மணியளவில் சுகுணனும் காரியாலயத் திலிருந்து திருவல்லிக்கேணியில் அறைக்குப் புறப்பட்டு விட்டான். . . . . н

முதல் நாளிரவு இரயிலில் உறக்கம் விழித்துப் பயணம் செய்ததனால் மிகவும் சோர்வாக இருந்தது. மனத்தின் சோர்வுகளும் உடலின் சோர்வுகளுமாக இரண்டும் சேர்ந் தி அவனை வாட்டின. ஒவ்வொரு நாளும் அலுவலகம் முடிந்து மாலையிலோ, இரவிலோ அறைக்குத் திரும்பி, யதும், இரண்டாவதாக ஒருமுறை குளிப்பது அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/68&oldid=590436" இலிருந்து மீள்விக்கப்பட்டது