பக்கம்:நெற்றிக்கண்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 67

வழக்கம். கடுங் கோடைக்காலமாக இருந்து வெப்பம் அதிகமாக வாட்டினாலோ நடுப்பகல் இடைவேளையின் போதுகூடக் குளிப்பதற்காகவே அறைக்குவந்து திரும்புவது முண்டு. உடம்பில் வெம்மையோ, வேர்வையோ, கசகச வென்று புழுங்கவிடாமல் வைகறை வேளையின் மலர் -களைப்போல் நறுமணம் கமழும் ஈரச் சந்தனத்தைப்போல் குளிரக் குளிர வைத்துக் கொள்வது அவனுக்கு மிக விருப்ப .மான காரியம். அன்றோ குளிக்க வேண்டுமென்று நினைப் பது கூடச் சோர்வாயிருந்தது. பல்லாயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டுவது போல மனத்தில் ஏதோ ஒரு நுட்ப மான வலி இசிவெடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் வழக்கப் படுத்திக் கொண்டுவிட்ட நல்லொழுக்கங்களின் மேல் அவனுக்கிருந்த பிடிவாதத்தின் காரணமாக அறைக்கு வந்ததும் முதல் வேலையாகக் குளித்து விட்டு வந்தான்.

அதிக வசதிகள் இல்லாத அந்தச் சிறிய அறையைத் துய்மையாகவும் துப்புரவாகவும் வைத்துக் கொள்வதில் சுகுணனுக்குப் பிரியம் அதிகம். ஊதுவத்திக் குழலில் மீத மிருந்த கடைசி ஊதுவத்தியும் கொளுத்திவிட்டுப் பாயை விரித்துக் கீழே அமர்ந்து சொந்தமாக வந்திருந்த இல கடிதங்களுக்குப் பதிலெழுதலானான். பி. இ. இன். மகா நாட்டிற்கு டெல்லி வருமாறு கடிதம் போட்டிருந்த நண்பன் மணிக்கும் அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் பெடரேஷனுக்காகக் கல்கத்தாவிலிருந்து கோஷ் எழுதி யிருந்த கடிதத்துக்கும் பதில் எழுதி முடித்த பிறகு "ஒய்விருக்கும் போது கிராமத்துக்கு வந்து தன்னோடு சில நாட்கள் தங்கிவிட்டுப் போக வேண்டுமென்று-எழுதி யிருந்த சகோதரிக்கும் மறுமொழி வரைந்தான். அடுத்த வார பூம்பொழிலில் இலக்கியமேடை’ கேள்வி-பதில் பகுதிக்கு வந்திருந்த கேள்வி கடிதங்களை ஒன்றாக அடுக்கிக் கட்டி எடுத்து வந்திருப்பது ஞாபகம் வந்தது. அவற்றை எடுத்து சிலவற்றிற்குப் பதில் எழுதினான். மனம் தனிமை -யாக, எல்லாவற்றிலும் விடுபட்டுத் தளர்ந்தது போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/69&oldid=590437" இலிருந்து மீள்விக்கப்பட்டது