பக்கம்:நெற்றிக்கண்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெற்றிக் கண்

முதல் அத்தியாயம்

"மனிதனுக்கு உண்மையான வலுவுள்ள கருவி கத்தியும் துப்பாக்கியும் அல்ல. தன்னுடைய கினைப்பும். பேச்சும் செய்கையும் நேர்மையானவை என்று தனக்குள் தானே நம்பி உணர்ந்து பெருமைப் படுகிற பெருமிதம்தான் அவனுடைய மெய்யான வலிமை.”*

-சுகுனன்

பொழுது விடிகிற நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பூக்கிற பூவின் வாசனையைப் போல் விடிகாலைக் குளிரின் இங்கிதமான சூழ்நிலையில் யாரோ ரோஜாப் பூக்களைவெறும் ரோஜாப் பூக்களையல்ல-பணிபுலராத ரோஜாப் பூக்களை-ஒவ்வொன்றாகப் பறித்து பதித்து ஒரு பிரம் மாண்டமான விசிறியைத் தயாரித்து மெல்ல வீசிக் கொண் டிருப்பது போல மென்மையும் குளிரும் கலந்ததோர் காற்று எங்கும் உலாவரத் தொடங்கியிருந்தது. . . .

விடியும் நேரத்துக்கு எப்போதுமே ஒரு தனி அழகு உண்டு. பன்னீரில் தோய்த்துத் தாமரைப் பூவை வெளியே, எடுப்பது போல் உலகம் ஏதோ ஒரு குளுமையில் முங்கி யெழுந்து வெளிவரும் இந்த மலர்ச்சியைச் சுகுணன் பல தாள் உணர்ந்து சிந்தித்து அனுபவித்திருக்கிறான். எதிரே நிமிர்ந்து பார்த்தால் பலகணி வழியே ஒரு மங்கலான புகைப்படம் போலக் கிழக்கே வெளுக்கும் வானம் தெரிந்தது. வட்டவடிவப் பெருங்குடையாய் வெட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/7&oldid=590373" இலிருந்து மீள்விக்கப்பட்டது