பக்கம்:நெற்றிக்கண்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 7 I

கூடியிருந்தார்கள். துளசியோடும் அவள் கணவனோடும், நாயரும், சர்மாவும், ஃபோர்மென் நாயுடுவும் அருகிலமர்ந்து ஏதோ சிரிப்புக் கலகலக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். சுகுணன் அருகில் வந்ததும் அவனை மரியாதை செய்து வரவேற்கும் பாவனையில் துளசி எழுந்து நின்றாள். ஃபோர் மென் நாயுடுவும் எழுந்து வரவேற்றார். முறையையும் பொது நாகரிகத்தையும் விட்டுக் கொடுக்க முடியாமல் துளசி தன் கணவனை அவனுக்கு அறிமுகம் செய்து வைத் தாள். அவர் நீட்டிய கையை ஏமாறவிடாமல் அவனும் புன், முறுவலோடு பற்றிக் குலுக்கினான். அப்போது அவன் நினைத்தான் : - - - .

கடவுளே மனம் என்பதை ஏன் இத்தனை இரகசிய மாகப் படைத்தாய்?"

எல்லாரும் இருக்கைகளில் அமர்ந்த பின் சில விநாடிகள் வரை ஒருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. -

சார் தான் தமிழில் நம்ம துளசியோட ஒரே ஃபேவரிட் ஆசிரியர்' என்று எதையாவது பேசவேண்டு மென்பதற் காகச் சொல்லுபவர் போல் குறுக்கிட்டுக் கூறினார்.

சர்மா. .

மனத்தின் சத்திய ஆழத்திலிருந்து பிறக்காமல் வெறும் தாக்கு நுனியிலிருந்து உதிர்ந்த அந்தப் போவிப் புகழ் வார்த்தைகள் சுகுணனின் செவிகளில் அபஸ்வரமாக ஒலித் தன. துளசியின் ஃபேவரிட் ஆசிரியன் -அவன் தான் என்பது உண்மையாயினும் சர்மா அதை வெளியிட்ட விதம் அந்தச் சூழ்நிலையில் போலியாக ஒலித்தது. விருந்: துக்காக வரிசை வரிசையாய் நாற்காலிகள் போடப்பட்டு அவர்கள் அமர்ந்திருந்த திறந்த புல்வெளியிலிருந்து மேலே தெரிந்த வானத்தில் அப்போதே மினுமினுக்கத் தொடங்கிவிட்ட ஏதோ ஒரு நட்சத்திரத்தைப் பராக்குப் பார்க்கலானான் சுகுணன், - . . . ; * . . . சிறிது நேரத்தில் விருந்து தொடங்கியது. மேடையில் முக்கியமான நடு இடத்தில் துளசியும் அவள் கணவனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/73&oldid=590442" இலிருந்து மீள்விக்கப்பட்டது