பக்கம்:நெற்றிக்கண்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்ா. பார்த்தசாரதி 73

அந்த வார்த்தைகளில் அடியுண்டு விழுந்த அவள் இரண்டு

விநாடி மெளனத்திற்குப் பின் பதில் சொன்னாள்: -

"அதெப்படி? நீங்கள் தலைசிறந்த கதாசிரியர்! எல்லா நல்ல ருசிகளும் உங்கள் பேனாவிலிருந்துதான் பிறக்க வேண்டுமென்று என்னைப் போன்றவர்கள் எல்லாம் தவம் கிடக்கிறோம். உங்களுக்கே ருசி போய்விட்டதென்றால்...' என்று சொல்லிவிட்டு அந்தச் சொற்களின் ஆழத்தை முடி மறைக்க மேலாக ஒரு புன்னகையும் புரிந்தாள் துளசி.

அந்த வார்த்தைகளைக்கேட்டு அவள் பக்கமாகத் திரும்பிக் கண்களைச் சிலகணம் அவள் முகத்தில் ஊன்றி ஒரு பார்வை பார்த்தான் சுகுணன், அந்தப் பார்வை அவள் பேச்சையும் சிரிப்பையும் அப்படியே கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டது. -

விருந்து முடிந்தது. ஃபோர்மென் இரண்டு பெரிய ரோஜாப்பூ மாலைகளை அவன் கையில் கொண்டுவந்து கொடுத்தார். அந்த மாலைகளில் ஒன்றைத் துளசியின் கைகளிலும், மற்றொன்றை மாப்பிள்ளையின் கைகளிலும் கொடுத்து அவர்களே ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளும்படி செய்தான் சுகுணன்.

துளசியின் மெல்லிய் விரல்கள் அந்த மாலையைத் தன் கைகளிலிருந்து வாங்க நடுங்குவதை அவன் கவனித்தான். அதைத் தன் கைகளிலிருந்து வாங்கும்போது அவள் கழுத் தும் தோள்களும், தலையும் ஏன் அப்படிக் குழைந்து குனிந்து தயங்கின? அவளையும் அறியாமல் அவனிடமிருந்து அந்த மாலையைத் தன் கழுத்திலேயே ஏற்றுக்கொள்ள் அவள் சரீரம் இயற்கையாகக் குழைகிறதா? சில பூக்கள் தென்றல் உராய்ந்ததும் மலருவதுண்டாமே! இன்னும் சில ஆக்கள் கைகள் பட்டால் மலருவதுண்டாமே!

"Larr(ipih கடவுளே மனம் என்பதை ஏன்தான் இத்தனை இரகசியமாகவும் இத்தனை நுணுக்கமாகவும் படைத்தாய்? ஒருவர் மனம் இன்னொருவருக்குப் பூட்டாகவும் ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/75&oldid=590444" இலிருந்து மீள்விக்கப்பட்டது