பக்கம்:நெற்றிக்கண்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நெற்றிக் கண்

நினைவு இன்னொருவருக்குப் புதிராகவும் ஏன் படைத் தாய்!' -

மாலைமாற்றிய கைகளோடு முகத்தில் இருந்த சிரிப்புப் பூச்சை மேலாகப் பிரித்தெடுத்துவிட்டு அடியிலிருந்த அசல் சோகத்தை மட்டுமே காண முடிந்தாற்போன்ற முகத்தோடு துளசி பதறி நிற்கையிலே, 'நான் ஆபட்ஸ்பரிக்கே வந்து உன் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற குறை: இனிமேல் உனக்கு இருக்காதே துள்சி?' என்று சர்வ சாதா ரணமான நகைச்சுவையோடு கேட்பது போல் அவளை ஒரு கேள்வி கேட்டான் சுகுனன். அதை எல்லாரும்-மாப்பிள் ளையும் கூடச் சிரித்து கைதட்டி வரவேற்றார்கள்.

துளசியின் முகத்திலோ அந்தக் கேள்வியை அவன் கேட்ட்போது ஏற்கெனவே இருந்த பூச்சுச்சிரிப்பும் மறைந்து விட்டது. அந்த முகத்தில் இருந்த பொதுவான மகிழ்ச்சியை யும் துடைத்தெறிந்துவிட்டது அவனுடைய அந்தக் கேள்வி. - - - - மேடைகளில் பேசிப் பேசிப் பழகிய அனுபவமும், துணி வும், அவன்ை அந்தத் திருமண விருந்துக் கூடத்தில் நன்றாக நாடகம் ஆட வைத்தன.

திடீரென்று தன்ன்ை எல்லாரிலும் மிகமிக மூத்தவ: னாக்கிக் கொண்டு, மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு' என்று குறள் கூறுகிறது. குடும் பம் ஆரம்பமாவது இருவர் அன்பில். வளர்வது மூன்றாவது அன்பைப் படைப்பதற்காக, இவ்வாறு படிப்படியாக அன்பை வள்ர்க்கும் ஒரு பண்ணையே நமது பாரத நாட்டு: இல்லற வாழ்வு. இந்த இருவர் அன்பில் ஒரு தியாகமயமான புதுத் திருப்பத்தை உண்டாக்குவது மக்கட்பேறு. குழந்தை கள் பிறக்குமுன் கணவன் மனைவி மேலும், மனைவி கண வன் மேலுமே மாற்றி மாற்றி அன்பைச் செலுத்துவதற்கு முடியும். இந்தக் காதல் ஓரளவு சுயநலமானது.தங்களைப் பற்றியது. இந்த அன்பே குழந்தைகள் பிறந்த பின்பு:சமூக நலமான பொது அன்பாக மாற முடியும். குடும்ப வாழ்வின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/76&oldid=590445" இலிருந்து மீள்விக்கப்பட்டது