பக்கம்:நெற்றிக்கண்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 75

தத்துவமே வீட்டளவில் ஓர் அன்பை வளர்த்து அந்த அன்பை நாட்டளவில் ஒரு சமூகச் சொத்தாக்குவதில் தான் இருக்கிறது. அத்தகைய சீரிய குடும்ப வாழ்வு நாம் இன்று பாராட்டும் இந்த மணமக்களுக்குக் கிடைக்கவேண்டு மென்று மனமார விரும்புவதைவிட வேறெந்தப் பெரிய வாழ்த்துக்களையும் இவர்களுக்கு நாம் தந்துவிடமுடியாது! அடுத்து நமது நிறுவனத்தைச் சேர்ந்த காலை மலர் நாளிதழ் ஆசிரியர் சர்மா அவர்கள் சில வார்த்தைகள் பேசி மன மக்களை வாழ்த்துவார்-என்று உற்சாகமாகத் தலைமை யுரை கூறிவிட்டு இடத்தில் அமர்ந்தான் சுகுணன். - அமர்ந்தவன் துளசியின் பக்கமாகத் திரும்பியபோது அவள் கண்களில் நீர் சுரந்திருப்பதைக் கண்டான். ஆயினும் அதைக் காணாததுபோல் இருந்து விடுவதைத் தவிர,அப். போது அவன்ால் செய்ய முடிந்தது வேறொன்றுமில்லை. அவள் மனம் புண்பட வேண்டுமென்று அவன் எதையும் பேச வில்லை. அவன் பேசிய எதையாவது அவள் தன்னைக் குத்திக்காட்டுவதாக எடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு, அவன் என்ன செய்ய முடியும்? எனவே அவன் துளசியின் பக்கம் பார்ப்பதைத் தவிர்த்துப் பேசத் தொடங்கியிருந்த சர்மாவின் பக்கம் தன் கவனத்தைச் செலுத்தினான்.

சர்மா நகைச்சுவைத் துணுக்குகளைப் பொழிந்து கூட் டத்தில் இருந்தவர்களைச் சிரிப்பிலாழ்த்திக் கொண்டிருந் தார். சர்மாவுக்கு ஒரு பலசரக்கு ஞானம். சங்கீதம், சமையல், சாப்பாடு, சினிமா, டென்னிஸ், பரதநாட்டியம் எல்லாவற்றிலும் வகைக்குக் கொஞ்சம் ஞானம் உண்டு. கடைசிப் பட்சமாகப் பத்திரிகைத் தொழிலும் கொஞ்சம் தெரியும். கொஞ்சந்தான்! அவர் பேசுவதிலுள்ள ஹாஸ்யங் களுக்குச் சிரிப்பதைவிடப் பேச முடியாமலோ, பேசச் சரி யான வார்த்தை வராமலோ மேடையில் அவர், தவிப்பதை யும் தடுமாறுவதையும் பார்த்தே கூட்டத்தில் அலையலை யாகச் சிரிப்புப் பொங்கும். சென்னையில் பெரும்பாலான புத்தக வெளியீட்டு விழாக்கள், சங்கீதசபாக்களின் கச்சேரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/77&oldid=590446" இலிருந்து மீள்விக்கப்பட்டது