பக்கம்:நெற்றிக்கண்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நெற்றிக் கண் கள், நாடகங்களின் அரங்கேற்றங்கள், இலக்கியக்கூடங்கள். ஆகியவற்றில் நிரந்தரமாக அவருக்கு ஒர் இடம் உண்டு. அதாவது நன்றி கூறுவது. ஒரு கூட்டத்திற்குச் சர்மா போயிருந்தால் அந்தக் கூட்ட முடிவில் நன்றி கூறும் பொறுப்பு அவருடையதாகத்தான் வந்து சேரும். இதனால் பொது இடங்களில் அவரைப்பற்றிக் குறிப்பிடும்போதோ பேசும்போதோ காலை மலர் ஆசிரியர் சர்மா என்று சொல் லாமல் யார்? நம்ம நன்றி சர்மா'வையா சொல்கிறீர்கள்!' -என்று குறிப்பிடுகிற அளவு அவருடைய நன்றிப் புகழ் பரவியிருந்தது.

அவருடைய பேச்சிலோ நன்றியிலோ ஒரு சிறப்பு அல் ல்து சிறப்பின்மை (நீங்கள் எப்படி வைத்துக் கொள்கிறீர் களோ அப்படி) என்னவென்றால் பேசத் தொடங்கிவிட்ட பேச்சையோ கூறத் தொடங்கிவிட்ட நன்றியையோ எந்த இடத்தில், எவ்வளவு நேரத்தில், எப்படி முடிப்பது என்று தெரியாமல் அவர் தவித்துத் தடுமாறுவதுதான். முடிப்பது போல் வருவார்! முடிக்கத்தெரியாமல் வேறு விஷயத்துக்குத் தாவி மறுபடி அங்கிருந்து இக்கரைக்கு வரத் தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்பார். இப்படி இவரை மேடையில் நிறுத்தி இவர் காமெடியன் மாதிரித் தவித்துத் திருதிரு வென்று விழிப்பதை வேடிக்கை பார்ப்பதற்காகவே இவரைப் பல கூட்டங்களில் பேச அல்லது நன்றி கூற அழைக்கிறார் களோ என்றுகூடச் சுகுணன் சில சமயங்களில் வேடிக்கை யாக நினைத்திருக்கிறான். ஆனால் அப்படியும் வேடிக்கை யாக நினைத்துவிட முடியாது. நன்றி சர்மாவுக்கு மயிலாப்பூர், மாம்பலம். அடையாறு ‘ஸ்நாப்'களினிடையே த்ல்ல செல்வாக்கு உண்டு. இந்தச் செல்வாக்குக்குப் பயந்து தான் காலை மலர் ஆசிரியராக அவரை வைத்திருந்தார் நாக சாமி, இலட்சியத் துடிப்புள்ள புதியதலைமுறை இளவட் டம். என்ற முறையில் சுகுணனிடம் சர்மாவுக்குக் கொஞ்சம் பியம் உண்டு. அவனை எதிர்க்கவோ அவனிடம் முரண் படவோ அவர் ஒருபோதும் துணியமாட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/78&oldid=590447" இலிருந்து மீள்விக்கப்பட்டது