பக்கம்:நெற்றிக்கண்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்த்சாரதி 7 7

மண்மக்களை வாழ்த்தி சர்மா அன்றும் நிறைய நேரம் பேசினார். அவருக்குப்பின் இன்னும் ஐந்தாறுபேர் பேசி :னார்கள். இறுதியில் ஃபோர்மென் நாயுடுவை நன்றிகூற அழைப்பதற்கு முன், ‘இன்று நன்றி கூறும் சான்ஸ்’ நமது சர்மா சாருக்கு இல்லை. சர்மா சார் தயவு செய்து என்னை மன்னித்து விடவேண்டும். இப்போது நாயுடு நன்றி கூறுவார்' என்று சுகுணன் அறிவித்த போது கூட்டத்தில் அலை அலையாகச் சிரிப்பு எழுந்தது. சர்மா கூட விழுந்து விழுந்து சிரித்தார். ஒருத்தி முகத்தில் மட்டும் ஈயாடவில்லை. அவள்தான் துளசி. -

மனங்களின் இரகசிய வேதனைகளைப் புறக் கண்களால் காண முடியாத இத்த உலகில் அப்பாவி நாயுடு எதை. எதையோ நினைவுப்படுத்தி நன்றி கூறிக் கொண்டி

ருந்தார்.

'நான் இந்தக் கூட்டத்துக்கு நம்ப சுகுனன் ஐயாவைத் தலை தாங்கச் சொன்னதுக்கு ஒரு காரணம் உண்டு. துளசிம்மாவுக்கு நம்ப சுகுணன் ஐயா கதை மேலே உசிர். பத்திரிகை பைண்டாகி வெளிவர்ர வரைக்குங்கூட அவங்களாலே பொறுத்துக்க முடியாது. எங்கிட்ட வந்து அச்சான ஃபாரத்தையே வாங்கிட்டுப் போய் தொடர் கதை படிச்சிடுவாங்க. சில சமயம் சார் கிட்டவே கையெழுத்துப் பிரதியைக் கேட்டு வாங்கிப் படிச்சிடும். கதைக்கு இன்னா படம் வருதுன்னு ஆர்ட்டிஸ்டுங்க கிட்டக் கூடப் போய்ப் பார்த்திட்டு வந்திடும். அத்தினி ஆர்வம் அத்தினி ஆசை.

மழை நீரின் கனம் தாங்காமல் தாழ்ந்து சாயும் பூச்செடிபோல் சுகுணனின் தலை தாழ்ந்தது. இந்த விநாடியில் துளசியின் இதயத்தில் இரத்தக் கண்ணிர் வடியும். என்ன செய்வது? இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வெளி நடிப்புச் செய்ய ஒர் ஆண்மகனால் முடியும், அந்த நடிப்பைத்தான் ககுனனும் இப்போது நயமாகவும் நாடக மாகவும் செய்து கொண்டிருந்தான். துளசியோ? தவித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/79&oldid=590448" இலிருந்து மீள்விக்கப்பட்டது