பக்கம்:நெற்றிக்கண்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 7. 9

தான் பட்டினத்துநாகரிகம். மனிதனுடைய சத்தியத்துக்கும். மனோதர்மத்துக்கும் சாயம் பூசி ஏமாற்றி விடுகிற பொய்" வண்ணமான இந்தச் சிரிப்பு என்கிற தரக்குறைவானமங்கலானவர்ணம்தான் இன்றைய நகரங்களின் பல பொது

நிகழ்ச்சிகளில் பரவலாகப் பூசப்பட்டு விடுகிறது என்று: நினைத்து உள் மனத்தில் தவித்தான் சுகுணன், :

துளசி அந்தக் கூட்டத்திலிருந்து போகும்போது கழுத்து வரை முட்ட முட்ட அழவேண்டிய துயரத்தோடு கனத்துப் போயிருக்கிறாள் என்று அவன் மனத்துக்குப் புரியும். ஒரு காலத்தில் அவள் இருந்த மனம் அது! இப்போதும் அவள் அங்கு இல்லையென்று சொல்லித் தீர்த்துவிட முடியாது. இருப்பதாகப் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளவும் முடியாது. அது ஒரு நுணுக்கமான வேதனை. -

விருந்துக்கு வந்திருந்த எல்லாரிடமும் பேசி விடை பெற்றுக்கொண்டு அவன் அறைக்குத் திரும்பும்போது இரவு பத்தரை மணிக்கு மேலிருக்கும். அந்த நேரத்திலும் வேர்வை அடங்க இன்னொரு முறை குளிக்க வேண்டும் போலிருந்தது. உடம்பில் அணுவளவு வேர்வை இருந்: தாலும் அவனுக்கு உறங்க வராது. துரங்குவதைக்கூடச் சுத்தமான உடம்போடு செய்து பழகியாயிற்று. இதனால் இரயிலில் போகும்போது வசதியான மெத்தை இடம் ஆகியவற்றோடு முதல் வகுப்பில் போனால்கூட அவனால் உறங்க முடியாது. சிறிது ஓசைகூட அவன் தூக்கத்தைக் கலைத்துவிடும். பல்லி சுவரில் ஊர்கிற ஒசையில் அல்லது கிசுகிசுக்கிற ஒசையில் பலமுறை நடு இரவில் விழித்துக் கொண்டு எழுந்திருக்கிறான் அவன். இத்தனை நுணுக்க மான உணர்வுகள் இருப்பதால்தான் அந்தரங்கமாக உணர்ச்சி நஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் தாங்கிக் கொள்ள இயலாத தவிப்பை அடைகிறோமோ என்று கூடத் தனக்குத்தானே சிலமுறை இதை ஒரு பலவீனமாகக்கூடப் பாவித்துக் கொண்டு சிந்தித்திருக்கிறான். சுகுணன். மேலோட்பமான உணர்வுகளே உள்ள பலருக்கு நடுவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/81&oldid=590450" இலிருந்து மீள்விக்கப்பட்டது