பக்கம்:நெற்றிக்கண்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 81

பாம்பும், தேளும், பூரானும், முதலையும், டிசைன் போட்ட கைலிகளைக் கட்டிக் கொண்டு ஐந்தாறு மர்ம மனிதர்களும் அவரிடம் உண்டு. கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் கண்ணப்பா

அவர்களின் மற்றோர் உபதொழிலான 'அழகு ராணிப் பதிப்பகம் இருந்தது. திருமூலமாமுனிவர் திருவாவடுதுரை

அரசமரத்தடியில் தவமிருந்து நூறு ஆண்டுகளுக்கு ஒரு

திருமந்திரம் சிரமப்பட்டு அருளியது போலல்லாமல்

இலக்கிய சாதனையை இன்னும் கொஞ்சம் வேகமாக மாற்றி ஆண்டுக்கு ஒரு நூறு துப்பறியும் மர்ம நாவல்கள்

வீதம் வெளியிட்டு அவற்றையும் கைலியோடு இலங்கைக்கும் மலேயாவுக்கும் ஏற்றி அனுப்புவது ராணிப் பதிப்பகத்தின்

தலையாய பணிகளில் ஒன்றாக இருந்தது.

தமிழ்நாட்டு சினிமா நட்சத்திரங்களின் வருடாந்திரக் காலண்டர் ஒன்றை விதவிதமான வண்ணப்படங்களோடு வெளியிட்டு இலங்கை மலேயா முதலிய நாடுகளில் மார்க் கெட் அடிப்பதும் கண்ணப்பாவின் தொழில் இரகசியங்கள். இன்னும் இல்லற இன்ப விதங்கள் - காதலிக்க எழுபத் திரண்டு வழிகள்' - இன்பம் இங்கே என்பதுபோல உக் கடையிலும் பீடிக்கடையிலும்கூட விலைப்போகும் சில மாயப் (மாயும்) பிரசுரங்கள் எல்லாம்கூட உண்டு. அரைக் கப் டியை நாலுபேராகப் பங்குப் போட்டுக் குடித்துவிட்டு இம்மாதிரி அமர இலக்கியங்களைப் படைத்துக் கொடுத்து அன்றாடச் செலவிற்கு இசண்டு மூன்று வாங்கிக்கொண்டு கண்ணப்பாவுக்குச் சலாம் போட்டுவிட்டுப் போகக்கூடிய ரெடிமேட் எழுத்தாளர்கள் நாலைந்துபேரும் அழகு ராணிப் பதிப்பகத்தில் உண்டு. இதில் சிலர் எழுத்துசீஸன்" டல்லாயிருக்கும்போது தேள், பூரான், பாம்புடன் கூடிய கலர் கைலியைக் கட்டிக் கொண்டு கடத்தல் கோஷ்டி யிலும் கூடப் போய் ஐக்கியமாவதுண்டு. -

மாடியில் லாட்ஜ் அறைகள் நிறைந்த ஹாலில் திடீர் திடீரென்டு தடு இரவில் பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக் கும் டெலிபோன் மணி அடிக்கும். அந்த வேளையிலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/83&oldid=590453" இலிருந்து மீள்விக்கப்பட்டது