பக்கம்:நெற்றிக்கண்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நெற்றிக் கண்

அதை எடுப்பதற்குக் கண்ணப்பாவின் ஆள் ஒருத்தன் அதன ருகிலேயே பழிகிடப்பான். கள்ளக்கடத்தல் சம்பந்தமான சாதகபாதகச் செய்திகளை அறியக் கண்ணப்பாவுக்கு அந்த டெலிபோன்தான் ஒரு கேந்திரமான செய்திக் கருவி. போர் முகாம்களில் வயர்லெஸ் ரேடியோவுக்குள்ள அத்தியா வசியம் இங்கே இந்த டெலிபோனுக்கு உண்டு. ஏதோ ஒரு நாள் இரவு ஒன்றரை மணிக்கு டெலிபோன் மணி விடாமல் அடித்தது. அதற்குக் காவலாகப் பழிகிடக்க வேண்டிய கண்ணப்பாவின் ஆள் அன்று இரவில் இரண்டாவது ஆட்டம் படம் பார்க்கப் போய்விட்டதால், உறக்கம் தடைப்பட்ட சுகுணன் அறையிலிருந்து கூடத்துக்கு வந்து மணி அடிப்பதையாவது நிறுத்தலாம் என்கிற எண்ணத்தில் டெலிபோனை எடுத்தான். எதிர்ப்புறம் கிருஷ்ணகிரியி விருந்து டிரங்கால்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதை யடுத்து ஒரு முரட்டுக்குரல் கரகரப்பான தொனியில், நம்பர் 8866 கிருஷ்ணகிரிக்கும் சேலத்துக்கும் நடுவே பஞ்சராயி நின்னுபோச்சு என்று ஒரே வாக்கியத்தை, இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டு டெலிபோனை வைத்துவிட்டது. மறுநாள் காலையில் கண்ணப்பாவின் ஆட்களும் அறையும் பரபரப்பாயிருந்த அலங்கோலத்தில் தான் 8866 எண்ணுள்ள கார் கடத்தல் பண்டங்களுடன் வரும்போது பிடிபட்ட செய்தியே அப்படிப் பூடகமாகக் கூறப்பட்டதாக உணர்ந்தான் சுகுணன். அப்படிப் பல இரகசிய வாக்கியங்கள் கள்ளக்கடத்தல் உலகில்

உண்டாம். -

அன்று துளசியின் திருமண விருந்திலிருந்து திரும்பி வந்து நீராடி முடித்த பின்பும் உறக்கம் வராமல் ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தான் சுகுணன். அப்போது மணி பதினொன்றரை ஆகியிருந்தது. வெளியே வழக்கம் போல டெலிபோன் மணி கிணுகினுத்தது. சரிதான் கண்ணப்பாவின் கடத்தல் ரதங்களில். ஏதோ ஒன்று ஏதோ ஒரு வழியில் சிக்கிவிட்ட செய்தி வருகிறது என்று எண்ணிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/84&oldid=590454" இலிருந்து மீள்விக்கப்பட்டது