பக்கம்:நெற்றிக்கண்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 8s

படி சுகுணன் ஒரு கணம் தனக்குத்தானே, சிரித்துக் கொண்டு புத்தகத்தை மேலே படிக்கத் தொடங்கினான்.

ஆனால் என்ன ஆச்சரியம்? ஃபோனடியில் வழக்க மாகப் பழிகிடக்கும் கண்ணப்பாவின் ஆள் ஓடிவந்து, 'சார் உங்களுக்குப் ஃபோன் வந்திருக்குது” என்றான்.

அச்சகத்தில் பத்திரிகைக்காக இரவு மெஷினில் ஒடும் ஃபாரத்தில் ஏதாவது அச்சுப்பிழை அல்லது சந்தேகம், அல்லது கரெக்ஷனில் ஒவர் எடுக்க முடியாமற் போகிற செய்தியைத் தெரிவிக்கச் சில சமயம் நைட் டியூடியில் உள்ள ஃபோர்மென் அவனை ஃபோனில் கூப்பிடுவது வழக்கம். இன்றும் அப்படி ஏதாவது சந்தேகம், வந்திருக் கும் போலும் என்றெண்ணியபடி அன்று மெஷினில் ஒடுகிற ஃபாரத்தின் விஷயங்களை நினைவுக்குத் தந்துகொண்டே எழுந்து வந்து டெலிபோனை எடுத்தான் சுகுணன். -

"துளசி பேசுகிறேன். முதலில் இந்த அர்த்தராத்திரி வேளையில் தொந்தரவு கொடுப்பதற்காக மன்னிக்கணும்.'

“ Fifi...” g -

- "உங்களை ஒன்று கேட்கணும். எவ்வளவோ அடக்கி .யும் எம் மனசு பொறுக்காமல் ஃபோனில் கூப்பிட்டேன்...'

  • . . . - -

அதற்கென்ன கேளேன்?'

'விருந்துக் கூட்டத்தில் என் கையில் மாலையைக் கொடுத்துவிட்டு 'ஆபட்ஸ்பரிக்கே வந்து உன் கல்யாணத் தில் கலந்து கொள்ளவில்லை என்கிற குறை இனி உனக்கு இருக்காது துளசி என்று சிரித்துக்கொண்டே கூறினிர்களே: அதற்கு என்ன அர்த்தம்?"

"என்ன அர்த்தம் என்று கூறுவதைவிட, என்ன அர்த்தம் இல்லை என்று கூறிவிடுவது இப்போது எனக்குச் .சுலபமாயிருக்கும் துளசி?' '

  • ’ என்ன !'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/85&oldid=590455" இலிருந்து மீள்விக்கப்பட்டது