பக்கம்:நெற்றிக்கண்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - நெற்றிக் கண்

கூட்ட நிகழ்ச்சி தொடங்கியதும் அவன் அவர்கள் வந்தி ருப்பதை மறந்து காரியங்களைக் கவனிக்க வேண்டிய தாயிற்று. அவனே தலைமையுரை பேச எழுந்து சகோதரர்களே!. சகோதரிகளே... என்று பேசத் தொடங் கியபோது மட்டும் இன்று கூட்டத்தில் நான் கணவருடன் வந்திருப்பதைப் பார்த்துத் தெரிந்து கொண்டும், வேண்டு மென்றே என்னைக் குத்திக்காட்டுவதற்காகத் தானே சகோதர சகோதரிகளே என்று பேசத் தொடங்கினர்கள்? என்பதாகத் துளசி ஃபோன் செய்து அன்றிரவே அரற்றத் தொடங்கி விடுவாளோ? என்று விநோதமாக ஒரு சந்தேக மும் எழுந்தது அவனுக்குள். - -

மனத்தில் பயமும் குற்ற உணர்வும், தாப்வு நினைவும் வந்து சுமந்துவிட்டாலே பின்பு எல்லாம் விகல்பமாகத்தான் தோன்றும். ஆனால் இந்தத் தயக்கம் ஒரு கணம்தான். அப்புறம் ஆற்றொழுக்குப்போல் ஒரே நிலைமையாக அவன் பேச்சு மேலே வளர்ந்தது. கூட்டம் தெருவிலிருந்தாலும் அமைதியாக எல்லாரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த வாசகசாலைக்கு அடிக்கடி நன்கொடை தருகிறவரோ என்னமோ ஒரு பிரபல நடிகர் நடுக்கூடத்தில் வந்து முன் பக்கமாக அமர்ந்து பேச்சின் கவனத்திலிருந்து நீங்கி எல்லோரும் சில நிமிடங்கள் தன்புறம் திரும்பச் செய்தார். -

சுகுணனுக்கு இந்த நடிகர்மேல் ஆத்திரம் மூண்டது.

மந்திரிகள் கூட்டத்தில் பாதியிலேயே போய் விடுவார் கள். நடிகர்கள் பாதிக்குமேல்தான் வருவார்கள், அப்படிப் பட்ட விநோதமான விசித்திரமான நாட்டில் நாம் வாழ் கிறோமென்பது உங்களுக்கு ஒவ்வொரு கணமும் நினை விருக்கவேண்டும் என்று பேச்சினிடையே குத்தலாக இரண்டு வாக்கியங்களைத் தொடுத்துவிட்டான் அவன். அவ்வளவுதான். உடனே கூட்டத்தில் சில: பகுதிகளில் மெல்ல ஒரு சலசலப்புக் கிளம்பியது. o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/88&oldid=590458" இலிருந்து மீள்விக்கப்பட்டது