பக்கம்:நெற்றிக்கண்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 7.

நிலையை ஒரு கணம் கற்பித்துப் பார்ப்பதோ, பாவித் துக் கொள்வதோ கூடச் சுமையைப் போல் கனத்தது அவனுக்கு. எவ்வளவு பெரிய கனத்தையும் சுமக்கின்ற வலு அவனுடைய மனத்திற்கும் தோள்களுக்கும் இருந்தன. சொக்கப்பா ஜிம்னாஸியத்தில் (உடற்பயிற்சி சாலை) காலையும் மாலையும் பயின்று பயின்று தேற்றியது தவிரத் தானே தன் உடம்பை வசீகரமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று விநாடிக்கு விநாடி ஓர் அந்தரங்கமான சுயந்லத்தோடு முகத்தையும், பரந்த பொன் நிற் மார்பை பும், திரண்டு செழித்த தோள்களையும் நிலைக்கண்ணாடி யிலும், தனிமையிலும் தேடித் தேடிக் கண்டு திருப்திப் படுகிற விடலைப் பருவத்துத் தவிப்போடு அவன் சிரசான மும் வேறு பல ஆசனங்களும் முறையாகச் செய்தது கூட

வேதாந்திகளும் சித்தர்களும் உடம்பை வெறுத்து எத்தனையோ பாடல்களைப் பாடித் தீர்த்துவிட்டுப் போயிருந்தாலும் மனிதனுக்கு ஒரு பருவத்தில் தன் உடம்பைத் தானே காதலித்து வளர்க்கத் தவிக்கும் தீவிர் மான ஆசை இருக்கத்தான் செய்கிறது. - .

இன்னும் கூடச் சுகுணனுடைய அந்தரங்கத்தில் அந்தச் சுயநலம் உண்டு. உடம்பின் சுத்தமும் திட்டமுமே, மனத்தின் ஒழுங்குக்குக் காரணங்களாக அமைவதையும் சொந்த அநுபவத்தில் அவன் உணர்ந்திருக்கிறான். தோளை வயிர முடைய தாக்கி உடற் சோர்வு-பிணி பலவும் போக்கி- அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல்-என்று பாடப் பட்டிருக்கும் அத்தகைய வலிமையை-விரும்பிப் பயின்று தேடித் தேடித்தான் அடைந்திருந்தான் அவன். கம்பீரமாக எழுந்து நின்றால் எதிராளியைக் கூசிக் குறுகிச் சிறிதாகிவிடச் செய்யும் இந்த தோற்றத்தை உடம்புதான் தனக்கு அளித்திருக்கிற தென்பது அவனுக்கே தெரியும். அவனுடைய தோள்களும் நெஞ்சமும் அதிகமான கனத்தைச் சுமக்கும் ஆற்றலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/9&oldid=590375" இலிருந்து மீள்விக்கப்பட்டது